Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
சத்தான.. ருசியான.. பிரண்டை சட்னியை செய்வது எப்படின்னு தெரியுமா?
Pirandai Chutney Recipe In Tamil: இன்று காலை உங்கள் வீட்டில் இட்லி அல்லது தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு அடிக்கடி கை, கால், மூட்டு வலி பாடாய் படுத்துமா? அப்படியானால் பிரண்டையைக் கொண்டு சட்னி செய்யுங்கள்.
இந்த பிரண்டை சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும். முக்கியமாக இந்த மூட்டு வலி பிரச்சனைகளைக் கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. அடிக்கடி இந்த சட்னியை செய்து சாப்பிட்டால், எலும்பு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

உங்களுக்கு பிரண்டை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பிரண்டை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பிரண்டை - 1/2 கப்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடலைப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
* வரமிளகாய் - 4
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 10 பல்
* இஞ்சி - 1/2 இன்ச்
* புளி - 1/2 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* வரமிளகாய் - 1
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் பிரண்டையை எடுத்து அதன் கூர்மையான முனைப் பகுதிகள், மேல்
தோல் மற்றும் அவற்றின் இலைகளை நீக்கிவிட்டு தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து வறுத்து, அந்த இரண்டையும் தனியாக ஒரு
தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதே எண்ணெயில் வெங்காயம், பூண்டு, இஞ்சி, பிரண்டை, புளி
மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 4-5 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு
வதக்க வேண்டும்.
* பிறகு தேங்காயை சேர்த்து 1 நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைத்து
மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 1/2 கப் நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு பௌலில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு
கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை
மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன்
சேர்த்து கிளறினால், சுவையான பிரண்டை சட்னி தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
