Latest Updates
-
3/4 கப் வேர்க்கடலையும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சட்னியை செய்யுங்க.. 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 29 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
உடுப்பி தேங்காய் கொத்தமல்லி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
லிவ்-இன் உறவு முறிவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு இளைஞர்களுக்கு நிம்மதி! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..! -
Mothers day 2026: உலக அன்னையர் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன தெரியுமா? -
லிவ்-இன் உறவில் பிரிவது குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு ஜோடிகளுக்கு நிம்மதி! -
வெறும் 4 பொருளை வெச்சு ஈஸியா மாம்பழ புட்டிங் செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க.. -
தங்கம் போல ஜொலிக்குற சருமம் வேண்டுமா? அப்ப மாம்பழத்தை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
பெப்பர் சிக்கன் ட்ரை
இந்த வார இறுதியில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பெப்பர் சிக்கன் ட்ரை செய்யுங்கள்.
இந்த வார இறுதியில் சிக்கன் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? அந்த சிக்கனைக் கொண்டு ஒரு ஸ்பெஷல் ரெசிபியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பெப்பர் சிக்கன் ட்ரை செய்யுங்கள். இந்த பெப்பர் சிக்கன் ட்ரை ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். இந்த பெப்பர் சிக்கன் ட்ரை ரெசிபி செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். இதை பேச்சுலர்களும் முயற்சி செய்யலாம்.

உங்களுக்கு பெப்பர் சிக்கன் ட்ரை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பெப்பர் சிக்கன் ட்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1/2 கிலோ
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
* கறிவேப்பிலை - சிறிது
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* கரம் மசாலா - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகுத் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 5-10 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மசாலா பொடிகள் அனைத்தையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
* பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 30 நிமிடம் சிக்கனை வேக வைக்க வேண்டும். ( சிக்கன் அடிபிடிக்காமல் இருக்க அவ்வப்போது கிளற வேண்டும்.)
* சிக்கன் நன்கு வெந்ததும், மூடியைத் திறந்து உயர் தீயில் வைத்து மசாலா நன்கு ட்ரையாகும் வரை வதக்கி, மேலே மிளகுத் தூளை சேர்த்து நன்கு கிளறி இறக்க வேண்டும்.
* இறுதியாக மேலே எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான பெப்பர் சிக்கன் ட்ரை தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications












