Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
பீர்க்கங்காயை வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவியே தோத்துபோயிடும்...
Peerkangai Gravy Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப்போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? வழக்கமாக செய்யும் சைடு டிஷ்ஷை விட சற்று வித்தியாசமான, அதே சமயம் ருசியான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் பீர்க்கங்காய் உள்ளதா?
அப்படியானால் அந்த பீர்க்கங்காயைக் கொண்டு கிரேவி செய்யுங்கள். இந்த கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். சொல்லப்போனால் இந்த கிரேவி சிக்கன் கிரேவியையே தோற்கடிக்கும் வகையில் ருசியாக இருக்கும். முக்கியமாக செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு பீர்க்கங்காய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீர்க்கங்காய் சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பீர்க்கங்காய் - 200 கிராம் (தோலுரித்து துண்டுகளாக்கிக்
கொள்ளவும்)
* பெரிய வெங்காயம் - 1 (நறுக்கியது)
* பெரிய தக்காளி - 1 (நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* உப்பு - 1 டீஸ்பூன்
* தயிர் - 1 கப்
* தண்ணீர் - 1/2 கப்
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பிரியாணி இலை - 1
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின்னர் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்க வேண்டும்.
* பின் பச்சை மிளகாயை நறுக்கி போட்டு வதக்க வேண்டும்.
* பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு தக்காளி
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள்,
காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, பச்சை வாசனை
போக நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு பீர்க்கங்காயை சேர்த்து நன்கு 2-3 நிமிடம் கிளறி விட
வேண்டும்.
* பின் மூடி வைத்து, மிதமான தீயில் வைத்து பீர்க்கங்காயை வேக வைக்க
வேண்டும். முக்கியமாக அவ்வப்போது மூடியைத் திறந்து அடிப்பிடிக்காமல்
இருக்க கிளறி விடுங்கள்.
* பீர்க்கங்காய் நன்கு வெந்ததும், கெட்டி தயிரை சேர்த்து, கிரேவிக்கு
தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, மூடி வைத்து, மீண்டும் 3-5
நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் கசூரி மெத்தியை கையால் நசுக்கிப்
போட்டு, அத்துடன் கொத்தமல்லியையும் தூவி நன்கு கிளறி இறக்கினால்,
சுவையான பீர்க்கங்காய் கிரேவி தயார்.
Image Courtesy: gomathirecipes



Click it and Unblock the Notifications
