Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
1 கப் வேர்க்கடலை இருந்தா.. ஈவ்னிங் நேரத்துல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. டேஸ்ட் செமயா இருக்கும்..
Verkadalai Pakoda Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் பிள்ளைகள் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அப்படியானால் காபி, டீ குடிக்கும் போது, நன்கு மொறுமொறுவென்று சாப்பிடக்கூடியவாறு பக்கோடா செய்து கொடுங்கள். அதுவும் வழக்கமாக செய்யும் பக்கோடாவை செய்யாமல், வீட்டில் 1 1/2 கப் வேர்க்கடலை இருந்தால், அதைக் கொண்டு பக்கோடா செய்து கொடுங்கள்.
இந்த வேர்க்கடலை பக்கோடா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு நன்கு மொறுமொறுவென்றும், ருசியாகவும் இருக்கும். அதுவும் ஒருமுறை இந்த பக்கோடாவை மொத்தமாக செய்து வைத்துக் கொண்டால், 2 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

உங்களுக்கு வேர்க்கடலை பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வேர்க்கடலை பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* சோம்பு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 7-8 பல்
* பச்சை மிளகாய் - 4
பக்கோடாவிற்கு...
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சூடான எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வேர்க்கடலை - 1 1/2 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 1 டீஸ்பூன் சோம்பு, 2 சிறிய துண்டு
இஞ்சி, பூண்டு 7-8 பல், 4 பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் 1 கப் கடலை மாவு மற்றும் 1/2 கப் அரிசி
மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மிளகாய் தூள்
சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் சூடான எண்ணெயை 2 டேபிள் ஸ்பூன் ஊற்றி கரண்டியால் கிளறி
ஆற விட வேண்டும்.
* கை பொறுக்கும் சூட்டிற்கு வந்ததும், கைகளால் பிசைந்து விட
வேண்டும்.
* பிறகு அதில் 1 1/2 கப் பச்சை வேர்க்கடலையை சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து பக்கோடா மாவு பதத்திற்கு
பிசைந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், பிசைந்து வைத்துள்ள பக்கோடா மாவை எண்ணெயில்
உதிர்த்து விட்டு, மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக ப்ரை செய்து
எடுத்தால், சுவையான வேர்க்கடலை பக்கோடா தயார்.



Click it and Unblock the Notifications