Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
வேர்க்கடலை சட்னியை ஒருமுறை இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்...
Peanut Chutney Without Coconut Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு சிம்பிளான அதே சமயம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இட்லி செய்வதாக இருந்தால், அதற்கு சட்னி தான் நல்ல காம்பினேஷனாக இருக்கும். அதுவும் சட்னியிலேயே வேர்க்கடலை சட்னியின் சுவையே எப்போதும் தனி தான். குறிப்பாக இந்த வேர்க்கடலை சட்னியை பல விதமாக செய்வார்கள்.
அதில் சிலர் தேங்காய் சேர்ப்பார்கள், இன்னும் சிலர் தேங்காய் சேர்க்காமல் செய்வர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையுடன் இருக்கும். நீங்கள் இதுவரை தேங்காய் சேர்த்து வேர்க்கடலை சட்னியை செய்திருந்தால், இன்று தேங்காய் சேர்க்காமல் செய்யுங்கள். இப்படி செய்யும் போது வேர்க்கடலையின் முழு சுவையையும் உணர முடியும்.

உங்களுக்கு தேங்காய் சேர்க்காமல் வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்க்காமல் செய்யக்கூடிய வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1 கப்
* வரமிளகாய் - 3
* மிளகு - 5-7
* பூண்டு - 1 பல்
* புளி - 1 சிறிய துண்டு
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* முதலில் வேர்க்கடலையின் தோலை நீக்கிவிட வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை சேர்த்து
பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலையை எடுத்து, அத்துடன்
வரமிளகாய், மிளகு, பூண்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான வேர்க்கடலை சட்னி
தயார்.
Image Courtesy: Cook With Manali



Click it and Unblock the Notifications
