Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
அப்பளமும், முட்டையும் இருந்தா.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸை செஞ்சு அசத்துங்க..
Papad Egg Samosa Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தை சாப்பிட வித்தியாசமான ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? அதுவும் நன்கு மொறுமொறுவென்று சாப்பிட கேட்கிறார்களா? அப்படியானால் சமோசா செய்து கொடுங்கள்.
அதுவும் உங்கள் வீட்டில் அப்பளமும், முட்டையும் இருந்தால், அட்டகாசமான சுவையில் சமோசாவை செய்யுங்கள். இந்த சமோசா செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு அப்பள முட்டை சமோசாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள முட்டை சமோசா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* முட்டை - 3
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* பெரிய அப்பளம்
* மைதா - 1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து
நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் 3 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு கிளறி, 3-5 நிமிடம்
வேக வைத்து, கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் மைதாவை எடுத்து, அத்துடன்
தேவையான அளவு நீர் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் செய்து கொள்ள
வேண்டும்.
* பின்னர் அப்பளத்தை எடுத்து நீரில் 30 நொடிகள் ஊற வைத்து எடுத்துக்
கொள்ள வேண்டும். பின் ஊற வைத்த அப்பளத்தை எடுத்து, அதன் நடுவே முட்டை
மசாலாவை ஒரு ஸ்பூன் வைக்க வேண்டும்.
* பின் அதைச் சுற்றி மைதா பேஸ்ட் தடவி, சமோசா வடிவில் மடித்து,
முனைகளை நன்கு ஒட்டி விட வேண்டும்.
* இதேப் போன்று அனைத்து அப்பளத்தையும் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், செய்து வைத்துள்ள சமோசாக்களைப் போட்டு
பொரித்து எடுத்தால், சுவையான அப்பள முட்டை சமோசா தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
