Latest Updates
-
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது!
பன்னீர் வாங்குனா.. மழை நேரத்துல ஒருவாட்டி இந்த மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Chilli Paneer Pepper Roast Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி பன்னீர் செய்வீர்களா? எப்போது பன்னீர் வாங்கினாலும், ஒரே மாதிரி தான் செய்து சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமான சுவையில் பன்னீர் செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் சில்லி பன்னீர் பெப்பர் ரோஸ்ட் செய்து சாப்பிடுங்கள்.
இந்த பன்னீர் ரோஸ்ட் நன்கு காரசாரமாக இருப்பதால், இது மழை நேரத்தில் சாப்பிட ஏற்றதாக இருக்கும். அதுவும் இதை சப்பாத்தி, புலாவ், சாதம் என அனைத்துடனும் சாப்பிடலாம். இப்படி ஒருமுறை பன்னீரை செய்யும் போது, பின் அடிக்கடி பன்னீரை இப்படி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு சில்லி பன்னீர் பெப்பர் ரோஸ்ட் ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சில்லி பன்னீர் பெப்பர் ரோஸ்ட் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ப்ரை செய்வதற்கு...
* பன்னீர் - 200 கிராம்
* எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மைதா - 5 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
வதக்குவதற்கு...
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 2
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (அரைத்தது)
* தண்ணீர் - 1/2 கப்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் பன்னீர் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் எலுமிச்சையின் சாற்றினை சேர்த்து பிரட்டிக் கொள்ள
வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து ஒருமுறை பிரட்டி விட வேண்டும்.
* அடுத்து அதில் மைதா மாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கலந்து கொள்ள
வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை
செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, வரமிளகாய் சேர்த்து கலந்து
விடவேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் அரைத்த தக்காளியை சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள்
சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி
விட வேண்டும்.
* பிறகு அதில் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, நீர் நன்கு கொதிக்க
ஆரம்பித்ததும், அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து, மசாலா அனைத்தும்
பன்னீருடன் சேரும் வரை நன்கு வேக வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு வற்றி, மசாலா பன்னீருடன் ஒன்று சேர்ந்து நன்கு ரோஸ்ட்
ஆன பின், கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான சில்லி
பன்னீர் பெப்பர் ரோஸ்ட் தயார்.



Click it and Unblock the Notifications