Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
சுவையான மற்றும் சத்தான... பன்னீர் பராத்தாவை எப்படி செய்யணும்-ன்னு தெரியுமா?
Paneer Paratha Recipe In Tamil: ஒவ்வொரு வேளை சமைக்கும் போதும் என்ன சமைப்பது என்றே பல மணிநேரம் யோசிப்பீர்களா? இன்று இரவு என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? தினமும் சப்பாத்தியை சாப்பிட்டு போடித்துவிட்டதா? அப்படியானால் இன்று பராத்தாவை முயற்சி செய்யுங்கள்.
பராத்தா என்பது சப்பாத்தியினுள் மசாலாவை வைத்து செய்யக்கூடிய ரெசிபி. இதில் பல வெரைட்டிகள் உள்ளன. அவை ஒவ்வொருவரின் விருப்பத்தைப் பொறுத்தது. அதுவும் நீங்கள் பன்னீர் பிரியர் என்றால், அந்த பன்னீரைத் துருவி அத்துடன் மசாலாக்களை சேர்த்து பிரட்டி சப்பாத்தியின் உள்ளே வைத்து ஸ்டஃப் செய்யுங்கள்.

இந்த பன்னீர் பராத்தா குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். பராத்தாவிற்கு சைடு டிஷ் ஏதுவும் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள், ஊறுகாய் அல்லது தயிரைத் தொட்டு சாப்பிடலாம்.
உங்களுக்கு பன்னீர் பராத்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் பராத்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 1/2 கப்
* மைதா - 1/4 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* நெய் - 2 டேபிள் ஸ்பூன்
உள்ளே வைப்பதற்கு...
* துருவிய பன்னீர் - 1 1/2 கப்
* பச்சை மிளகாய் - 5-6 (பொடியாக நறுக்கியது)
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1/2 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 சிட்டிகை
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, உப்பு
மற்றும் சிறிது எண்ணெய் சேர்த்து கலந்து, நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி
நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து, ஒரு ஸ்பூன்
எண்ணெயை மேலே தடவி மூடி வைத்து குறைந்தது 15 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்னர் ஒரு பௌலில் துருவிய பன்னீர், பச்சை மிளகாய், கரம் மசாலா,
மல்லித் தூள், சாட் மசாலா, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு தயாரித்து வைத்துள்ள மாவை சம உருண்டைகளாக உருட்டி தனியாக
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு உருண்டையை எடுத்து, அதை சற்று தட்டையா தேய்த்து, நடுவே
சிறிது பன்னீர் கலவையை வைத்து, மூடி, மீண்டும் தட்டையாக தேய்த்துக்
கொள்ள வேண்டும்.
* இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் தட்டையாக தட்டி ஒரு தட்டில்
வைத்துக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும்,
தேய்த்து வைத்துள்ள பராத்தாவை ஒவ்வொன்றாக போட்டு, எண்ணெய் ஊற்றி
முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சுவையான பன்னீர் பராத்தா
தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications
