Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
பன்னீர் வெச்சு ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க...
Paneer Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி அடிக்கடி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு பன்னீர் சைடு டிஷ் அதிகம் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் பன்னீர் சைடு டிஷ் செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் ஒருமுறை இந்த ஸ்டைலில் பன்னீர் கிரேவி செய்யுங்கள்.
இந்த கிரேவியின் ஸ்பெஷலே, பால் அதிகம் சேர்ப்பது தான். இப்படி பால் சேர்ப்பதால், கிரேவி நன்கு க்ரீமியாகவும், ருசியாகவும் இருக்கும். அதுவும் நீங்கள் சமையலை கற்றுக்கொண்டிருப்பவர் என்றால், நிச்சயம் இந்த கிரேவியை ட்ரை செய்யுங்கள். இதனால் நிச்சயம் உங்கள் வீட்டில் உள்ளோரிடம் நல்ல பாராட்டைப் பெறலாம்.

முக்கியமாக இந்த கிரேவியை ஒருமுறை வீட்டில் செய்தால், அடிக்கடி செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் அந்த அளவில் இதன் சுவையால் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லிக் கேட்பார்கள். அதுவும் இப்படி கிரேவி செய்யும் போது வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பன்னீர் - 150 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெண்ணெய் - சிறிது
* பிரியாண இலை - 1
* ஏலக்காய் - 2
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 2 (அரைத்தது)
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 கப்
* முந்திரி - 5 (பாலில் ஊற வைத்தது)
* காய்ச்சிய பால் - 3/4 கப்
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், காஷ்மீரி மிளகாய் தூள், சீரகத் தூள், மஞ்சள் தூள்
மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகளை சேர்த்து 2-3 நிமிடம் ப்ரை செய்து,
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு முந்திரியை பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும்
வெண்ணெய் சேர்த்து உருகியதும், பிரியாணி இலை மற்றும் ஏலக்காய்
சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு தூவி, வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள்,
மல்லித் தூள், சீரகத் தூள் சேர்த்து குறைவான தீயில் வைத்து, பச்சை
வாசனை போக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, எண்ணெய் பிரியும் வரை நன்கு
வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் கரம் மசாலாவை சேர்த்து கிளறி, 1 கப் நீரை ஊற்றி,
மூடி வைத்து, 5 நிமிடம் கிரேவியை கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் மிக்சர் ஜாரில் ஊற வைத்த முந்திரியை பால் ஊற்றி, நன்கு
மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* கிரேவி நன்கு கொதித்ததும், அதில் அரைத்த முந்திரி விழுது மற்றும்
3/4 கப் பாலை ஊற்றி, கசூரி மெத்தியை கைகளால் நசுக்கி சேர்த்து கிளறி,
மூடி வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து, அதில் ப்ரை செய்து
வைத்துள்ள பன்னீர் துண்டுகளை எண்ணெயுடன் அப்படியே சேர்த்து, அத்துடன்
மிளகுத் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க
வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications