Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
குழந்தைகளின் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் சில பொதுவான லன்ச்பாக்ஸ் தவறுகள்! இனிமே பண்ணாதீங்க -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும்
பன்னீர் கிரேவி எப்பவும் ருசியா வரணுமா? அப்ப இந்த ஸ்டைல்-ல பண்ணுங்க.. அல்டிமேட்டா இருக்கும்..
Hyderabadi Style Paneer Gravy Recipe In Tamil: உங்கள் வீட்டில் இரவு நேரத்தில் பெரும்பாலும் சப்பாத்தி செய்வீர்களா? அந்த சப்பாத்திக்கு அடிக்கடி பன்னீரை சைடு டிஷ்ஷாக செய்வீர்களா? ஆனால் நீங்கள் செய்யும் பன்னீர் கிரேவி அவ்வளவு ருசியாக இருக்காதா? ஒவ்வொரு முறையும் சுவையில் வித்தியாசம் தெரியுமா?
நல்ல பக்காவான சுவையில் பன்னீர் கிரேவி செய்ய வேண்டுமா? அப்படியானால் ஹைதராபாதி ஸ்டைல் பன்னீர் கிரேவியை கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்யுங்கள். இப்படி செய்தால் நீங்கள் செய்யும் பன்னீர் கிரேவியின் ருசி எப்போதும் ஒரே மாதிரி இருக்கும். மேலும் வீட்டில் உள்ளோர் வழக்கமாக செய்வதை விடவும் அதிகமாக சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு ஹைதராபாதி ஸ்டைல் பன்னீர் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஹைதராபாதி ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* தக்காளி - 2 (நறுக்கியது)
* புதினா - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* முந்திரி - 10-12 (சுடுநீரில் 10 நிமிடம் ஊற வைத்தது)
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - 1/4 டீஸ்பூன்
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* பெரிய வெங்காயம் - 1 ( மிகவும் பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
* சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்
* சுடுநீர் - 2 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெண்ணெய் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் தக்காளி, புதினா, கொத்தமல்லியை சேர்த்து
நன்கு மென்மையாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் ஜாரை கழுவிவிட்டு, சுடுநீரில் ஊற வைத்த முந்திரியை
சேர்த்து, நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து, அத்துடன்
பன்னீர் துண்டுகளையும் சேர்த்து ப்ரை செய்து, பன்னீரை தனியாக எடுத்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே எண்ணெயில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அதன் பின் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து, அத்துடன்
மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், மிளகுத் தூள், சிக்கன்
மசாலா சேர்த்து, நன்கு பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் 2 1/2 கப் சுடுநீரை ஊற்றி கிளறி, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து மூடி வைத்து 5-6 நிமிடம் நன்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, அதில் பன்னீர் துண்டுகளை
சேர்த்து கிளறி, 2 நிமிடம் கொதிக்க வைத்து, வெண்ணெய் மற்றும்
கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், சுவையான ஹைதராபாதி ஸ்டைல்
பன்னீர் கிரேவி தயார்.



Click it and Unblock the Notifications