Just In
- 25 min ago
ஒவ்வொரு நாளும் நீங்க இத்தனை படிகள் நடந்தீங்கனா... உங்க உடல் எடை சீக்கிரமா குறையுமாம்...!
- 1 hr ago
என்ன பண்ணாலும் முடி வளர மாட்டீங்குதா? அதுக்கு நீங்க செய்யுற இந்த தவறுகள் தான் காரணம்...
- 3 hrs ago
பெண்கள் ஆயுள்முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எதை எவ்வளவு சாப்பிடணும் தெரியுமா?
- 4 hrs ago
அடிக்கடி கல்லீரலை சுத்தம் செய்வதால் உடலினுள் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?
Don't Miss
- Finance
ஓரே நாளில் 5.43 லட்சம் கோடி இழப்பு.. முதலீட்டாளர்கள் கண்ணீர்..!
- Sports
பேட்டிங்கின்போது சரியான ஷூக்களை உபயோகிக்கணும்... சீனியர் வீரரின் அட்வைஸ்!
- News
தமிழைப்போல் ஆங்கிலத்திலும் புலமை பெற்று விளங்கிய தா.பாண்டியன்!
- Movies
சூர்யாவின் படங்களை மிஸ் பண்ணாம பார்பேன்.. கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் பேச்சு!
- Automobiles
ஃபோக்ஸ்வேகன் அர்டியோன் சொகுசு செடான் கார் இந்தியா வருகிறது
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சுவையான... பன்னீர் போண்டா
உங்கள் வீட்டில் பன்னீர் உள்ளதா? மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றுகிறதா? அப்படியானால் பன்னீரைக் கொண்டு அட்டகாசமான ஒரு போண்டா செய்யலாம். இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடியதும் கூட.
இப்போது பன்னீர் போண்டா எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை மாவு - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* புதினா - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
* பன்னீர் - 1 கப் (சதுர துண்டுகளாக்கப்பட்டது)
* தண்ணீர் - தேவையான அளவு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் கடலை மாவை எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் போட வேண்டும்.
* பிறகு கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
* அடுத்து அதில் நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.
Image Courtesy: yummytummyaarthi