Latest Updates
-
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க..
பன்னீரை எப்பவும் ஒரே மாதிரி கிரேவி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு பாருங்க.. ருசி அள்ளும்..
Paneer Afghani Recipe In Tamil: உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்தால், அதற்கு பெரும்பாலும் வீட்டில் பன்னீரை செய்வீர்களா? அதுவும் எப்போதும் ஒரே ஸ்டைலில் தான் பன்னீரை கிரேவி செய்து சாப்பிடுவீர்களா? இப்படி ஒரே மாதிரி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்தமுறை பன்னீரை செய்வதாக இருந்தால், பன்னீர் ஆப்கானி கிரேவியை செய்யுங்கள். இந்த கிரேவி சாப்பாத்தியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு சுலபமாக இருக்கும்.
உங்களுக்கு பன்னீர் ஆப்கானி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பன்னீர் ஆப்கானி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
வதக்கி அரைப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு
* பூண்டு - 5 சிறிய பல்
* பச்சை மிளகாய் - 2
* கொத்தமல்லி - சிறிது
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
மசாலா பொருட்கள்...
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
செய்முறை:
* முதலில் பன்னீர் துண்டுகளை சற்று நீளத் துண்டுகளாக வெட்டி ஒரு
பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகுத் தூள், உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி
மற்றும் சிறிது எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து ஒரு 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், ஊற வைத்துள்ள பன்னீர் துண்டுகளை சேர்த்து ப்ரை
செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து
நன்கு கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். பின் அதில்
கொத்தமல்லியைத் தூவி லேசாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, அத்துடன் தயிரை
சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் அரைத்ததை எடுத்து, அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்
தூள், மல்லித் தூள், கரம் மசாலா, சிறிது கொத்தமல்லி மற்றும் சிறிது
உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் அரைத்த விழுதை சேர்த்து கிளறி, 2 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* பின்பு அதில் ப்ரை செய்த பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, மூடி
வைத்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான பன்னீர் ஆப்கானி
தயார்.
Image Courtesy: Teluginti Vanta



Click it and Unblock the Notifications
