Latest Updates
-
செப்டம்பர் இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொழில் வளரும்.. வருமானம் அதிகரிக்கும்.. -
கன்னி ராசிக்குள் சூரியன் நுழைவதால் துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சரவணபவன் பச்சை பயறு குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு செமையா இருக்கும் -
பூமியின் வயது என்ன தெரியுமா? அடேங்கப்பா இத்தனை கோடி வருஷமா? ஷாக் ஆகாதீங்க -
எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப 2 ஸ்பூன் கடலை மாவு இருந்தா இப்படி யூஸ் பண்ணுங்க.. -
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் இனிப்பு பிடிக்கொழுக்கட்டை - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க. -
இந்த 4 ராசிக்காரங்கள துரதிர்ஷ்டமும், தோல்வியும் எப்பவும் துரத்திக்கிட்டே இருக்குமாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இரத்தப் புற்றுநோயின் 3 முக்கிய வகைகள் என்ன? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை விளக்கும் டாக்டர்! -
செரிமான பிரச்சனைக்கு குட்-பை சொல்லும் புதினா வெற்றிலை ரசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
கொத்தமல்லி பருப்பு கடையல் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - வேற லெவலில் இருக்கும்
பள்ளிப்பாளையம் காளான் வறுவல் ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... சிக்கனை விட டேஸ்ட் சூப்பரா இருக்கும்...!
Pallipalayam Mushroom Fry Recipe in Tamil: சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவுகள் பெரும்பாலான நபர்களுக்கு மிகவும் பிடித்தவையாக இருக்க காரணம் அதன் சுவைதான். ஏனெனில் அசைவ உணவுகள் சமைப்பது போலவே சமைத்தாலும் சைவ உணவுகளால் அசைவத்தின் சுவையை ஈடுசெய்ய முடியாது. அதனால்தான் அசைவ உணவுகளுக்கான தேவையும், அவற்றை சமைக்கும் விதமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
விதிவிலக்காக சில பொருட்கள் அசைவ உணவின் சுவையை கிட்டதட்ட 90% ஈடுசெய்யும். அதில் முக்கியமான ஒன்றுதான் காளான். காளானை சிக்கனை சமைக்கும் அனைத்து வழிகளிலும் சமைக்கலாம். அப்படி காளானை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான சைடிஷ்தான் கொங்கு ஸ்பெஷல் பள்ளிப்பாளையம் காளான்.

பள்ளிப்பாளையம் சிக்கன் தமிழ்நாடு முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு உணவாகும். பள்ளிப்பாளையம் காளானும் கிட்டத்தட்ட அதே போல அட்டகாசமான சுவையில் இருக்கும். காளான் சுவையானது மட்டுமல்ல மிகவும் ஆரோக்கியமானதும் கூட, அதனை இந்த முறையில் செய்யும் போது அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் சூப்பரான பள்ளிப்பாளையம் காளானை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
- காளான் - 200 கிராம்
- தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
- வரமிளகாய் - 5
- கறிவேப்பிலை - சிறிது
- பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
- நறுக்கிய தக்காளி - 1
- பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்
- மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
- மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
- முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
- பின் வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும், அதன்பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனதும் அதில் தக்காளியை சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
- பிறகு அதில் உப்பு, மஞ்சள் தூள், மல்லித் தூள், கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் அதில் 1/4 கப் நீரை ஊற்றி, மூடி வைத்து 2-3 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- கலவை நன்கு கொதித்ததும் அதில் நறுக்கிய காளான் சேர்த்து வேக வைக்கவும். காளான் வெந்ததும் தேங்காய் துண்டுகளை சேர்த்து கிளறி விட வேண்டும்.
- காளான் நன்கு வெந்ததும், இறக்கி மேலே சிறிது தேங்காய் எண்ணெய் மற்றும் சிறிது மிளகுத் தூள் தூவி இறக்கினால், அட்டகாசமான பள்ளிப்பாளையம் காளான் வறுவல் ரெடி!



Click it and Unblock the Notifications
