Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
Pacharisi Maavu Chips Recipe In Tamil: உங்கள் குழந்தைகள் எந்நேரமும் சாப்பிட ஸ்நாக்ஸ் கேட்கிறார்களா? எப்போதும் கடைகளில் வாங்கி கொடுக்கும் அளவில் வசதி இல்லையா? அப்படியானால் வீட்டிலேயே ஸ்நாக்ஸ் செய்யுங்கள்.
அதுவும் வீட்டில் 1 கப் பச்சரிசி மாவு இருந்தால், அதைக் கொண்டு ரிப்பன் பக்கோடா மாதிரி செய்து வைத்துக் கொண்டால், ஒரு வாரத்திற்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது. முக்கியமாக இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி மாவு சிப்ஸை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி மாவு சிப்ஸ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* தண்ணீர் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* எள்ளு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* வறுத்த பச்சரிசி மாவு - 1 கப்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 கப்புக்கு சற்று
குறைவான அளவில் நீரை எடுத்து ஊற்றி, அத்துடன் சுவைக்கேற்ப உப்பு,
மிளகாய் தூள், மஞ்சள் தூள், எள்ளு விதைகள், எண்ணெய், கறிவேப்பிலை
சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீரானது நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், தீயைக் குறைத்து விட்டு,
பச்சரிசி மாவை சேர்த்து அப்படியே கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
நீரானது சற்று குறைவாக இருப்பது போன்று தான் இருக்கும். இருப்பினும்,
இது தான் சரியான அளவு.
* மாவானது நன்கு வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அந்த மாவை ஒரு
பாத்திரத்தில் போட்டு, மூடி வைத்து, கை பொறுக்கும் அளவு சூட்டிற்கு
வந்ததும், கைகளை நீரில் நனைத்துவிட்டு, பின் மாவை நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* அதிக சூடாக இருப்பதை உணர்ந்தால், அவ்வப்போது கைகளை நீரில் நனைத்துக்
கொண்டு, பின் பிசையுங்கள்.
* பின் பிசைந்த மாவை 4 உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சப்பாத்தி கட்டையில் எண்ணெய் தடவி விட்டு, ஒரு உருண்டையை
எடுத்து நடுவே வைத்து, தட்டையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் கத்தியால் நீளத் துண்டுளாக, சிப்ஸ் போன்று வெட்டிக் கொள்ள
வேண்டும். பிறகு வெட்டிய துண்டுகளை எண்ணெய் தடவிய தட்டில் எடுத்துக்
கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், துண்டுகளாக்கப்பட்ட சிப்ஸை சேர்த்து
உடனே கரண்டியால் கிளறி விடாமல், பப்பிள்ஸ் அடங்கியதும், அதைத்
திருப்பிப் போட்டு, பின் கரண்டியால் கிளறி விட்டு, பொன்னிறமாக
பொரித்து எடுக்க வேண்டும். இதேப்போல் அனைத்து சிப்ஸையும் பொரித்து
எடுத்தால், பச்சரிசி மாவு சிப்ஸ் தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications
