Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
புரோட்டீன் அதிகம் நிறைந்த பச்சை பயறு இட்லி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க...
Pachai Payaru Idli Recipe In Tamil: உங்கள் வீட்டில் காலையில் பெரும்பாலும் இட்லி தான் செய்வீர்களா? எப்போதும் ஒரே சுவையில் இட்லி செய்து சாப்பிட்டு போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில், அதே சமயம் சத்தான இட்லியை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் பச்சை பயறு கொண்டு இட்லி செய்து சாப்பிடுங்கள்.
இந்த பச்சை பயறு இட்லி நன்கு மென்மையாக பஞ்சு போன்று இருப்பதோடு, ஏராளமான புரோட்டீனையும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளையும் கொண்டது. இந்த இட்லியை அடிக்கடி செய்து சாப்பிட்டால் உடல் வலிமையாக இருக்கும். அதுவும் இந்த இட்லி டயட்டில் இருப்போருக்கு ஏற்றது. இந்த இட்லிக்கு சட்னி, சாம்பார் பொருத்தமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு பச்சை பயறு இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை பயறு - 1 கப்
* உளுத்தம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் பச்சை பயறை நீரில் கழுவிவிட்டு,
பின் அதில் நீரை ஊற்றி குறைந்தது 8 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் உளுத்தம் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, அதில் நீரை ஊற்றி
2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சை பயறை மட்டும் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, ஒரு பாத்திரத்தில்
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே ஜாரில் ஊற வைத்த உளுத்தம் பருப்பை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, அதை அரைத்த பச்சை பயறு மாவுடன்
சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட
வேண்டும்.
* பின் அரைத்த மாவை மூடி வைத்து 4 மணிநேரம் நொதிக்க வைக்க
வேண்டும்.
* 4 மணிநேரம் கழித்து மாவை நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு இட்லி தட்டை எடுத்து, அதன் குழிகளில் எண்ணெய் தடவி, கலந்து
வைத்துள்ள மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து, வேக வைத்து
எடுத்தால், சுவையான பச்சை பயறு இட்லி தயார்.



Click it and Unblock the Notifications