Latest Updates
-
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
பச்சை மொச்சை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில செமயா இருக்கும்...
Pacha Mochai Kuzhambu Recipe In Tamil: தற்போது பச்சை மொச்சை சீசன். இந்த சீசனில் தான் இந்த பச்சை மொச்சையை ருசிக்க முடியும். உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பச்சை மொச்சையை ருசியாக செய்து கொடுக்க நினைக்கிறீர்களா? அப்படியானால் இந்த பக்குவத்தில் பச்சை மொச்சை குழம்பு செய்யுங்கள்.
இப்படி மொச்சை குழம்பு செய்தால், அது கறிக்குழம்பு ருசியில் அட்டகாசமாக இருக்கும். முக்கியமாக இந்த மாதிரி குழம்பை ஒருமுறை செய்து கொடுத்தால், பின் உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள்.

உங்களுக்கு பச்சை மொச்சை குழம்பை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை மொச்சை குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை மொச்சை - 200 கிராம்
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு..
* இஞ்சி - 1 சிறிய துண்டு
* பூண்டு - 5
* சின்ன வெங்காயம் - 5
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* சோம்பு - 1/4 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* முந்திரி - 5
செய்முறை:
* முதலில் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய பெரிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பச்சை மொச்சையை சேர்த்து, 5 நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா, குழம்பு
மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், துருவிய
தேங்காய், சோம்பு, சீரகம் மற்றும் முந்திரி சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை குக்கரில் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு
நீரை ஊற்றி கிளறி, உப்பு சுவை பார்த்து, வேண்டுமானால் உப்பு சேர்த்து
கலந்து, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்,
சுவையான பச்சை மொச்சை குழம்பு தயார்.



Click it and Unblock the Notifications