Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சன்டே ஸ்பெஷல்: ஆரஞ்சு சிக்கன் ரெசிபி
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? ஒரு அசத்தலான மற்றும் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் ஆரஞ்சு உள்ளதா? அப்படியானால் ஆரஞ்சு சிக்கன் செய்யுங்கள்.
இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் சிக்கன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? ஒரு அசத்தலான மற்றும் வித்தியாசமான சிக்கன் ரெசிபியை செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் ஆரஞ்சு பழம் உள்ளதா? அப்படியானால் ஆரஞ்சு சிக்கன் செய்யுங்கள். இந்த ஆரஞ்சு சிக்கன் சற்று வித்தியாசமான சுவையில், அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த ஆரஞ்சு சிக்கனை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். முக்கியமாக இந்த ஆரஞ்சு சிக்கன் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையாக இருக்கும். பேச்சுலர்களும் இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம்.

உங்களுக்கு ஆரஞ்சு சிக்கன் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆரஞ்சு சிக்கன் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ
* முட்டை - 1
* உப்பு - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1/4 டீஸ்பூன்
* சோள மாவு - 2+1 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப்
* வரமிளகாய் - 4 (விதைகள் நீக்கி, பொடியாக நறுக்கியது)
சாஸ் மிக்ஸ்...
* ஆரஞ்சு ஜூஸ் - 1 1/2 கப்
* துருவிய இஞ்சி - 1/2 டீஸ்பூன்
* துருவிய பூண்டு - 1 பல்
* நாட்டுசர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்
* சில்லி கார்லிக் சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த சிக்கனில் உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பிசைய வேண்டும்.
* பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, 2 டேபிள் ஸ்பூன் சோள மாவு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கன் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் சாஸ் மிக்ஸிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் சாஸ் மிக்ஸரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் சோள மாவை நீரில் கரைத்து ஊற்றி, சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட வேண்டும்.
* அடுத்து பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து, பொடியாக நறுக்கிய வரமிளகாயைத் தூவி, சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான ஆரஞ்சு சிக்கன் தயார்.
Image Courtesy: simpleindianrecipes



Click it and Unblock the Notifications
