Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நைட் சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் இப்படியொரு சைடு டிஷ் செஞ்சு சாப்பிடுங்க.. சுவை அள்ளும்...
Onion Thokku Recipe In Tamil: இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அந்த சப்பாத்திக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? ஆனால் உங்கள் வீட்டில் காய்கறி எதுவுமே இல்லையா? வெறும் வெங்காயம் மட்டும் தான் உள்ளதா?
அப்படியானால் அந்த வெங்காயத்தைக் கொண்டு அட்டகாசமான ஒரு தொக்கு செய்யலாம். இந்த வெங்காய தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுக்கு வெங்காய தொக்கு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய தொக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பூண்டு - 15 பல்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 5 (நீளவாக்கில் வெட்டியது)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - 3/4 டம்ளர்
செய்முறை:
* முதலில் சிறிய அம்மிக் கல்லில் பூண்டு பற்களை சேர்த்து
ஒன்றிண்டாக தட்டிக் கொள்ள வேண்டும். அப்படி தட்டும் போது, அத்துடன்
சோம்பு தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போக
மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மெல்லியதாகவும், நீளவாக்கிலும் வெட்டி வைத்துள்ள
வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை
வதக்க வேண்டும்.
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3/4 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் மிதமான
தீயில் வைத்து, நன்கு சுருங்கும் வரை வதக்கி இறக்கினால், சுவையான
வெங்காய தொக்கு தயார்.
Image Courtesy: Apoorvaa's Nalabagam



Click it and Unblock the Notifications