Latest Updates
-
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா? -
அக்டோபர் இறுதியில் நிகழும் குரு-கேது சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரப்போகுது!
1 கைப்பிடி வேர்க்கடலையும், 1 வெங்காயமும் இருந்தா போதும்.. இட்லி, தோசைக்கு செம சைடு டிஷ் செய்யலாம்...
Onion Peanut Chutney Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி, தோசை தான் டிபன் செய்யப் போகிறீர்களா? அதற்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துவிட்டீர்களா? இன்னும் இல்லை என்றால், உங்கள் வீட்டில் வேர்க்கடலை உள்ளதா?
அப்படியானால் அந்த வேர்க்கடலையுடன் வெங்காயத்தை சேர்த்து அட்டகாசமான சுவையில் ஒரு சட்னியை செய்யுங்கள். இந்த சட்னி இட்லி, தோசையுடன் மட்டுமின்றி, சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது காலையில் டக்கென்று செய்வதற்கு ஏற்றவாறு இருக்கும்.

உங்களுக்கு வெங்காய வேர்க்கடலை சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய வேர்க்கடலை சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பச்சை வேர்க்கடலை - 1 கைப்பிடி
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* மல்லி - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 2
* கறிவேப்பிலை - 2 கொத்து
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சை வேர்க்கடலையை
சேர்த்து நன்கு வறுத்து, அதை ஒரு தட்டில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், மல்லி விதை, சீரகம், வரமிளகாய் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து
கண்ணாடி பதத்திற்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வறுத்த வேர்க்கடலையை சேர்த்து சற்று
பொடித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் வதக்கி வைத்துள்ள வெங்காய கலவையை சேர்த்து, முதலில்
ஒருமுறை லேசாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து அரைக்க
வேண்டும். முக்கியமாக நீரை அதிகமாக சேர்த்துவிடாதீர்கள்.
* இறுதியாக அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்தக் கொள்ள வேண்டும்.
இந்த சட்னியை தாளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒருவேளை தாளிக்க
விரும்பினால், ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியுடன்
சேர்த்து கிளறினால், வெங்காய வேர்க்கடலை சட்னி தயார்.
Image Courtesy: kurinji. com



Click it and Unblock the Notifications
