Latest Updates
-
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க..
இட்லிக்கு ஒருடைம் இந்த சைடு டிஷ்ஷை செய்யுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...
Vengaya Kosu Recipe In Tamil: உங்கள் வீட்டில் அடிக்கடி இட்லி, தோசை தான் செய்வீர்களா? அதற்கு எப்போதும் ஒரே மாதிரி சட்னி, சாம்பார் செய்து போரடித்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையில் ஏதாவது சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா?
அப்படியானால் காரைக்குடி ஸ்பெஷல் வெங்காய கோசு செய்யுங்கள். இந்த வெங்காய கோசுவை ஒருமுறை செய்தால், வீட்டில் உள்ளோர் அடிக்கடி செய்ய சொல்லி கேட்பார்கள். அந்த அளவில் இதன் சுவை ருசியாக இருக்கும். முக்கியமாக இந்த வெங்காய கோசு 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு வெங்காய கோசுவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெங்காய கோசு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* பட்டை - 1 துண்டு
* பிரியாணி இலை - 1
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 2
* அன்னாசிப்பூ - 1
* கல்பாசி - 2
* சோம்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பச்சை மிளகாய் - 3 (கீறியது)
* பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (நறுக்கியது)
* புதினா - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி
அரைப்பதற்கு...
* தேங்காய் - 1/4 கப்
* பொட்டுக்கடலை - 1 ஸ்பூன்
* கசகசா - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 3
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய்,
அன்னாசிப்பூ, கல்பாசி, சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு நன்கு
வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி மற்றும் புதினாவை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் தேங்காய், பொட்டுக்கடலை, கசகசா, சோம்பு,
வரமிளகாய் சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் அரைத்ததை வாணலியில் ஊற்றி, சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து, உயர் தீயில் வைத்து, 10 நிமிடம் மூடி வைத்து கொதிக்க
வைக்க வேண்டும்.
* 10 நிமிடம் நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு,
கொத்தமல்லியைத் தூவினால், சுவையான வெங்காய கோசு தயார்.



Click it and Unblock the Notifications