Latest Updates
-
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
1 கப் பச்சரிசியும், வெல்லமும் இருந்தா இந்த செட்டிநாடு கந்தர் அப்பத்தை செஞ்சு பாருங்க - சூப்பரா இருக்கும் -
அடிக்கடி சளி, இருமல் பிடிச்சு பாடாய்படுத்துதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 விதமான உணவுகளை தினமும் சாப்பிடுங்க.. -
டைனோசர்கள் உருவாவதற்கு முன்பே பூமியில் உருவான நதி எது தெரியுமா? இப்பவும் இதில் தண்ணீர் இருக்காம் -
செப்டம்பரில் உருவாகும் பல அரிய ராஜயோகங்கள்: இந்த 4 ராசிக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும்.. உங்க ராசி என்ன? -
துவரம் பருப்பும், தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் தேடிவரப்போகுதாம்
1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
Onion Bonda Recipe In Tamil: தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருக்கும் குழந்தைகள் ஏதாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். அதுவும் மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது மொறுமொறுவென்று ஏதாவது சாப்பிட கேட்பார்கள். அப்போது நீங்கள் பெரும்பாலும் பஜ்ஜி, போண்டா செய்வீர்களா?
பொதுவாக பஜ்ஜி, போண்டா செய்வதற்கு கடலை மாவைத் தான் பயன்படுத்துவோம். ஆனால் உங்கள் வீட்டில் ரேசன் பச்சரிசி அதிகம் இருந்தால், அதைக் கொண்டும் போண்டா செய்யலாம் தெரியுமா? அதற்கு அந்த அரிசியை 1 மணிநேரம் ஊற வைத்து அரைத்து, பின் போண்டாவிற்கு தேவையான பொருட்களை சேர்த்து பிசைந்து செய்ய வேண்டும். இந்த பச்சரிசி போண்டா நன்கு மொறுமொறுவென்று இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு பச்சரிசி வெங்காய போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சரிசி வெங்காய போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்த செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ரேசன் பச்சரிசி - 1 கப்
* கெட்டி தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* சீரகம் - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ரேசன் பச்சரிசியை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின்
நீரில் 1 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் ஊற வைத்த பச்சரிசியை சேர்த்து, நீர்
சேர்க்காமல் தயிரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய்,
இஞ்சி, சீரகம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு பிசைந்து விட
வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக
எடுத்து, போண்டாக்களாக போட்டு, மிதமான தீயில் வைத்து பொன்னிறமாக
பொரித்து எடுத்தால், சுவையான வெங்காய போண்டா தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications