Latest Updates
-
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
1 கப் இட்லி மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
Ola Pakoda Recipe In Tamil: கோடை விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகள் எதையாவது சாப்பிட கேட்டுக் கொண்டே இருப்பார்கள். இம்மாதிரியான சூழ்நிலையில் தினமும் பணத்தை அதிகம் செலவழித்து ஸ்நாக்ஸ் வாங்கி கொடுக்க முடியாது. இந்நிலையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு அற்புதமான சில ஸ்நாக்ஸ்களை செய்து கொடுப்பதே சிறந்த வழி.
உங்கள் குழந்தைகள் மொறுமொறுவென்று சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் 1 கப் இட்லி மாவு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு அற்புதமான சுவையில் ஓல பக்கோடா அல்லது ரிப்பன் பக்கோடாவை செய்து கொடுங்கள். இந்த பக்கோடா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். காபி, டீ போடும் நேரத்திலேயே செய்துவிடலாம்.

இப்போது இந்த ஓல பக்கோடாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஓல பக்கோடா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பொட்டுக்கடலை - 1 கப்
* புளிக்காத பிரஷ்ஷான இட்லி மாவு - 1 கப்
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஓமம் - 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - சிறிது
* தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை
சேர்த்து நிறம் மாறாத அளவில் லேசாக வறுத்து இறக்கி குளிர வைத்து,
மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் இட்லி மாவை எடுத்து, அத்துடன்
பொட்டுக்கடலை பொடியை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள், சீரகத் தூள், பெருங்காயத் தூள், ஓமம்
மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து
கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், முறுக்கு அச்சை எடுத்து, அதில் ஓல பக்கோடா அச்சை
வைத்து, முதலில் அவற்றில் எண்ணெய் தடவி, பின் பிசைந்த மாவை உள்ளே
வைத்து, நேரடியாக எண்ணெயில் பிழிந்து விட்டு, பொன்னிறமானதும் எடுக்க
வேண்டும்.
* இதேப் போல் அனைத்து மாவையும் சுட்டு எடுத்தால், சுவையான ஓல பக்கோடா
தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
