Latest Updates
-
குட்டி போண்டாவும், கார சட்னியும் - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
கிரகப்பிரவேசத்தின் போதும், புதிய வீட்டிற்கு குடிபோகும் போதும் முதலில் ஏன் பால் காய்ச்சுகிறார்கள் தெரியுமா? -
இதுல ஒரு காட்டுப்பாதையை தேர்ந்தெடுங்க.. உங்களை மிகவும் சோர்வடையச் செய்வது எதுன்னு சொல்றோம்.. -
காய்கறிகளை இந்த மாதிரி சேமித்து வைத்தால் வாரக்கணக்கில் கெட்டுப்போகாமல் இருக்குமாம் - ட்ரை பண்ணி பாருங்க -
கமகமக்கும்.. செட்டிநாடு நண்டு மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவிலேயே அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் எது தெரியுமா? எத்தனை மொழினு தெரிஞ்சா நம்பவே மாட்டிங்க -
சுகர், எடை குறைப்புக்கு உதவும் GLP-1 மருந்துகளால் பார்வை பறிபோகுமா? மருத்துவ ஆய்வுகள் கூறும் பகீர் உண்மைகள்! -
ஆந்திரா ஸ்டைல் கோங்குரா புளியோதரை ரெசிபி - இந்த மாதிரி புளி சாதம் செஞ்சு பாருங்க -வித்தியாசமா செமையா இருக்கும் -
தங்கம் ஏன் மஞ்சள் நிறத்தில் மட்டும் இருக்கிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சுக்ராதித்ய யோகத்தால் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்.. பண மழை கொட்டும்..
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
ஓட்ஸ் கொண்டு மாலை வேளையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்யலாம். அது தான் ஓட்ஸ் கட்லெட். இந்த கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும்.
ஓட்ஸ் உடலுக்கு ஆரோக்கியமான ஓர் உணவுப் பொருள் என்பது அனைவருமே அறிந்த ஒன்று. இதன் சுவை பலருக்கும் பிடிக்காது. ஏனெனில் ஓட்ஸ் கொண்டு செய்யப்படும் கஞ்சி அவ்வளவு ருசியானதாக இருக்காது. ஆனால் இந்த ஓட்ஸ் கொண்டு மாலை வேளையில் ஒரு அற்புதமான ஸ்நாக்ஸ் செய்யலாம். அது தான் ஓட்ஸ் கட்லெட். இந்த கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானதாக இருக்கும்.

இப்போது ஓட்ஸ் கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று காண்போம். அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வறுத்த ஓட்ஸ் - ஒரு கப்
* பன்னீர் - அரை கப்
* துருவிய கேரட் - 4 டேபிள் ஸ்பூன்
* வேக வைத்த உருளைக்கிழங்கு - ஒரு கப்
* இஞ்சி பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - அரை டீஸ்பூன்
* மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
* பச்சை மிளகாய் பேஸ்ட் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பெரிய பௌலில் ஓட்ஸ், மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், துருவிய கேரட், உப்பு, மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதில் பன்னீரை போட்டு நன்கு மாவு பதத்தை பிசைந்து கொள்ள வேண்டும்.
* பிறகு பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, தட்டையாக கட்லெட் வடிவில் தட்டிக் கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு பேனை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், கட்லெட் துண்டுகளை போட்டு முன்னும், பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பாக ஓட்ஸ் கட்லெட் தயார்.



Click it and Unblock the Notifications
