Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
எள்ளு சிக்கன் குழம்பு
சிக்கன் குழம்புகளில் பல வெரைட்டிகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு பகுதியைப் பொறுத்து, சிக்கன் குழம்புகளின் சுவையானது மாறுபடும். அந்த வகையில், அசைவ உணவாளர்களுக்கு எள்ளு சிக்கன் குழம்பு மிகவும் பிடித்தமானதாக இருக்கும். மேலும் இதன் செய்முறையும் மிகவும் எளிதானது. பேச்சுலர்கள் கூட, இந்த ரெசிபியை முயற்சி செய்யலாம்.
இப்போது அந்த எள்ளு சிக்கன் குழம்பை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ (சிறு துண்டுகளாக்கப்பட்டது)
தக்காளி - 3 (அரைத்தது)
பச்சை மிளகாய் - 3-4 (பொடியாக நறுக்கியது)
எள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு நீரில் கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து சிக்கன் துண்டுகளைப் போட்டு 7-8 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு உப்பு, மிளகு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 5 நிமிடம் கிளறி, சிக்கனை தட்டில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதே வாணலியில் எள் மற்றும் சீரகம் போட்டு, 2 நிமிடம் வறுத்து, அரைத்து வைத்துள்ள தக்காளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் மல்லி தூள் சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
இறுதியில் தனியாக வைத்துள்ள சிக்கனை சேர்த்து தீயை குறைவில் வைத்து, சற்று தண்ணீர் ஊற்றி சிக்கனை நன்கு வேக வைக்க வேண்டும். குழம்பானது சற்று கெட்டியானதும், அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இப்போது சூப்பரான எள்ளு சிக்கன் குழம்பு ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால் அருமையாக இருக்கும்.



Click it and Unblock the Notifications

