Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: மொராக்கோ சிக்கன் ரெசிபி
கிறிஸ்துமஸ் பண்டிகை வரப் போகிறது. அனைவரும் வீட்டை சுத்தப்படுத்தி, கிறிஸ்துமஸ் மரங்களை அலங்கரிக்க ஆரம்பத்திருப்போம். அதே சமயம் சிலர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது வீட்டிற்கு வரும் விருந்தினரை எப்படி அசத்துவது என்று யோசிப்பார்கள். அப்படி நீங்கள் யோசிப்பவராக இருந்தால், ஆப்ரிக்கா ரெசிபியான மொராக்கோ சிக்கன் ரெசிபியை செய்து அசத்துங்கள்.
இந்த ரெசிபி செய்வதற்கு ஈஸியாக இருப்பதோடு, மிகுந்த சுவையுடன் இருக்கக்கூடியது. மேலும் இது ஆரோக்கியமான ரெசிபியும் கூட. எப்படியெனில், இந்த ரெசிபியான ஆலிவ் ஆயில் கொண்டு செய்யப்படுகிறது. சரி, இப்போது அந்த மொராக்கோ சிக்கன் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் மார்பு - 2
மிளகு - 10
பட்டை - 1
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி - 1 இன்ச்
பூண்டு - 5 பற்கள்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
துருவிய எலுமிச்சை தோல் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
ஆலிவ் பழம் - அலங்கரிப்பதற்கு
செய்முறை:
முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் மிக்ஸியில் மிளகு, பட்டை, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, எலுமிச்சை தோல், எலுமிச்சை சாறு ஆகியவற்றை போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் சில்லி ப்ளேக்ஸ், உப்பு, சீரகப் பொடி மற்றும் மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு கழுவி வைத்துள்ள சிக்கனின் நடுவே ஆங்காங்கு கத்தி கொண்டு கீறி விட வேண்டும்.
பின்னர் கலந்து வைத்துள்ள கலவையை சிக்கனில் நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் நன்கு வேகும் வரை பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான மொராக்கோ சிக்கன் ரெசிபி ரெடி!!!



Click it and Unblock the Notifications
