Latest Updates
-
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செப்டம்பரில் நிகழும் செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கையால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிக்கும் அமைச்சர் செங்கோட்டையன்! இதன் ஆரோக்கிய நன்மைகளை பட்டியலிடும் டாக்டர்!
நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்
Navratri 2023: 9 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பூஜையின் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு பிரசாதம் செய்து படைப்பீர்களா? இன்று என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஜவ்வரிசி சுண்டல் செய்யுங்கள். ஜவ்வரிசி சுண்டல் செய்வது மிகவும் சுலபம்.
முக்கியமாக இதற்கு ஜவ்வரிசியும், பாசிப்பருப்பும் இருந்தால் போதும். ஜவ்வரிசி சுண்டல் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். குறிப்பாக இதை மாலை வேளையில் ஸ்நாக்ஸ் ஆகவும் செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு ஜவ்வரிசி சுண்டல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஜவ்வரிசி சுண்டல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஜவ்வரிசி - 1 கப்
* பாசிப்பருப்பு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பச்சை மிளகாய் - 1 (கீறியது)
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் பாசிப்பருப்பை நன்கு பொன்னிறமாக வறுத்து இறக்கி, ஒரு பாத்திரத்தில் போட்டு, பருப்பு மூழ்கும் வரை நீரை ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும். அப்படி வேக வைக்கும் போது பருப்பானது பார்க்கும் போது முழுசாகவும், அழுத்தும் போது மென்மையாகவும் இருக்கும் அளவு வேக வைத்து இறக்க வேண்டும். பொதுவாக பாசிப்பருப்பு வேக 3-5 நிமிடம் எடுக்கும்.
* பின் ஜவ்வரிசியை நீரில் அலசி, குறைந்தது 4 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். முக்கியமாக ஜவ்வரிசியில் அளவுக்கு அதிகமாக நீர் ஊற்றி விட வேண்டாம். ஜவ்வரிசி மூழ்கும் வரையில் மட்டும் நீர் ஊற்றினால் போதும். இல்லாவிட்டால், ஜவ்வரிசி அளவுக்கு அதிகமான நீரை உறிஞ்சி குலைந்துவிடும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் ஊற வைத்துள்ள ஜவ்வரிசியை சேர்த்து குறைவான தீயில் சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான ஜவ்வரிசி சுண்டல் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications