Latest Updates
-
World Mental Health Day 2026: ரீல்ஸ் பார்ப்பது மனநிலையை எப்படிப் பாதிக்கிறது? விளக்கும் மனநல மருத்துவர்! -
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும்
சன்டே ஸ்பெஷல்: ருசியான... நல்லி எலும்பு மசாலா
Nalli Elumbu Masala: இந்த வார இறுதியில் உங்கள் வீட்டில் உள்ளோருக்கு அட்டகாசமான ரெசிபியை செய்து கொடுத்து அசத்த நினைக்கிறீர்களா? அப்படியானால் நல்லி எலும்பு மசாலாவை செய்து கொடுங்கள்.
இந்த நல்லி எலும்பு மசாலா இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.

உங்களுக்கு நல்லி எலும்பு மசாலா எப்படி எளிய முறையில் செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே நல்லி எலும்பு மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* பட்டை - 1 சிறிய துண்டு
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* மல்லி விதைகள் - 1 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வரமிளகாய் - 6-7
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சின்ன வெங்காயம் - 15
* பூண்டு - 7 பல்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
கிரேவிக்கு...
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 2 (நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* நல்லி எலும்பு - 1/2 கிலோ
* எலுமிச்சை - 1
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் மல்லி விதைகள், மிளகு, சீரகம், சோம்பு, வரமிளகாய்
சேர்த்து குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* அதன் பின் கசகசாலை சேர்த்து ஒருமுறை கிளறி, பின் சின்ன வெங்காயம்,
பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின்பு துருவிய தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* அதன் பின்பு மிக்சர் ஜாரில் போட்டு சிறிது நீரை ஊற்றி நன்கு
மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்க
வேண்டும்.
* பிறகு தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மிதமான தீயில் வைத்து,
சில நிமிடங்கள் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் நல்லி எலும்பை கழுவிப் போட்டு நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 2 கப் நீரை ஊற்றி, மூடி
வைத்து, குறைவான தீயில் வைத்து 20-25 நிமிடம் வேக வைத்து இறக்க
வேண்டும்.
* இறுதியாக மேலே எலுமிச்சை சாற்றினை ஊற்றி கிளறினால், சுவையான நல்லி
எலும்பு மசாலா தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
