Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
கொங்கு ஸ்பெஷல் மட்டன் தண்ணி குழம்பு ரெசிபி... ஒரு தடவ செஞ்சு பாருங்க... தெருவே மணக்கும்...!
Kongunadu Mutton Thanni Kulambu Recipe in Tamil: சண்டே என்றாலே பெரும்பாலான மக்களுக்கு அசைவம்தான். சொல்லப்போனால் ஞாயிறுக்கிழமை வருவதே பெரும்பாலான மக்களுக்கு அசைவ உணவுகள் சாப்பிடத்தான். அசைவ உணவுகளிலேயே பல வகைகள் உள்ளது. அதேபோல ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு ஸ்பெஷல் உணவு இருக்கும். அந்த வகையில் கொங்கு மண்டலத்தில் மிகவும் பிரபலமான அசைவ உணவுகளில் ஒன்று தண்ணி குழம்பு.
கிட்டத்தட்ட சூப் போல இருக்கும் இந்த குழம்பை நாட்டுக்கோழி மற்றும் மட்டன் இரண்டிலுமே செய்யலாம். இந்த இரண்டுமே முற்றிலும் தனித்துவமான சுவை கொண்டது. இந்த பதிவில் காரசாரமான மட்டன் தண்ணி குழம்பு எப்படி வைக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம். இந்த மட்டன் தண்ணி குழம்பை சூடான சாதத்தில் ரசம் போல ஊற்றி சைடிஷாக மட்டன் வறுவல் வைத்து சாப்பிட்டால் சண்டே சந்தோஷமாக நிறைவடையும்.

தேவையானப் பொருட்கள்:
- அரை கிலோ மட்டன்
- 25 சின்ன வெங்காயம்
- 2 ஸ்பூன் தேங்காய் துருவல்
- 10 பல் பூண்டு
- இஞ்சி ஒரு துண்டு
- 2 ஸ்பூன் முழு மல்லி
- 4 வர மிளகாய்
- அரை ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் மிளகு
- 1 ஸ்பூன் சோம்பு
- அரை ஸ்பூன் கசகசா
- கறிவேப்பிலை ஒரு கொத்து
- 2 பட்டை
- 4 கிராம்பு
- 2 ஏலக்காய்
- சிறிது கல்பாசி
- தேவையான அளவு உப்பு
- தேவையான அளவு எண்ணெய்
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை:
- ஒரு கடாயில் முழு மல்லி, வர மிளகாய், சோம்பு ,சீரகம், மிளகு, பட்டை ,லவங்கம், ஏலக்காய் ,கல்பாசி, கறிவேப்பிலை, கசகசா சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- அதே கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து தேங்காய் துருவல் 20 சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கிய பின் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்
- பின்னர் மிக்ஸி ஜாரில் வதக்கிய மசாலாவை தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- குக்கரில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- வெங்காயம் வதங்கிய பின் மட்டன் மஞ்சத்தூள் சேர்த்து பத்து நிமிடம் வதக்கி கொள்ளவும்.
- மட்டன் நன்கு வதங்கியதும் அதில் அரைத்து வைத்திருந்த மசாலாப் பொருட்களை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து குக்கர் க்ளோஸ் செய்து ஆறு விசில் வரும்வரை வேக வைக்கவும்.
- குக்கர் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான மட்டன் தண்ணி குழம்பு ரெடி.



Click it and Unblock the Notifications





