Latest Updates
-
இந்த நாடுகளில் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் தங்க நகை அணிய மாட்டார்களாம் - ஏன் தெரியுமா? -
ஆகஸ்ட் 12-ல் நிகழும் சூரிய கிரகணத்திற்குப் பிறகு ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் தலவாழை படையல் மெனு - என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அரைச்சுவிட்ட பூசணிக்காய் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
சொரியாசிஸ் பற்றி ஒவ்வொருவரும் கட்டாயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட டாக்டர்! -
உலகம் முழுவதும் டாக்டர்கள் வெள்ளை நிற கோட் அணிவதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன தெரியுமா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
கோதுமை முட்டை தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 10 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சன்டே ஸ்பெஷல் - மட்டன் தலைக்கறி வறுவல்
இந்த வார இறுதியில் நல்ல சுவையான ஒரு நான்-வெஜ் ரெசிபியை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு தலைக்கறி பிடிக்குமா? அப்படியானால் இந்த வாரம் தலைக்கறி வாங்கி அதை வறுவல் செய்து சாப்பிடுங்கள்.
இந்த வார இறுதியில் நல்ல சுவையான ஒரு நான்-வெஜ் ரெசிபியை சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு தலைக்கறி பிடிக்குமா? அப்படியானால் இந்த வாரம் தலைக்கறி வாங்கி அதை வறுவல் செய்து சாப்பிடுங்கள். இந்த மட்டன் தலைக்கறி வறுவல் இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். மேலும் இந்த மட்டன் தலைக்கறி செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இது பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு மட்டன் தலைக்கறி வறுவல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் தலைக்கறி வறுவல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மட்டன் தலைக்கறி - 1/2 கிலோ
* வெங்காயம் - 3
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகம் - 2 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* இஞ்சி - 1 இன்ச்
* பூண்டு - 6 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெங்காயத்தை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் தலைக்கறியை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில், மிளகு, 2 டீஸ்பூன் சீரகம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, 1/4 டீஸ்பூன் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் கழுவிய தலைக்கறியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து 3 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3-5 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் உள்ள நீரை வற்ற வைத்து இறக்கி, மேலே கொத்தமல்லியைத் தூவினால் மட்டன் தலைக்கறி வறுவல் தயார்.
Image Courtesy: madraasi



Click it and Unblock the Notifications