Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க, ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை பாப்பீங்க..! -
இன்றைய ராசிபலன் 28 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு சோதனைகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது..
பூரிக்கு இந்த பக்குவத்துல மட்டன் கிரேவி செய்யுங்க.. டேஸ்ட் சும்மா டக்கரா இருக்கும்...
Mutton Gravy Recipe In Tamil: ஞாயிற்றுக் கிழமை வந்தாலே அனைவருக்கும் ஒருவித சந்தோஷம் இருக்கும். ஏனெனில் இந்நாளில் நமக்கு பிடித்த உணவை நன்கு சமைத்து, பொறுமையாக ரசித்து ருசித்து சாப்பிட முடியும். இந்த வாரம் உங்கள் வீட்டில் மட்டன் எடுக்கப் போகிறீர்களா? அப்படியானால் காலையில் பூரி செய்து அதற்கு மட்டன் கிரேவியை சைடு டிஷ்ஷாக செய்யுங்கள்.
இந்த மட்டன் கிரேவி பூரியுடன் மட்டுன்றி, சப்பாத்தி, சாதம் என அனைத்துடனும் சாப்பிட அருமையாக இருக்கும். ஒருமுறை இந்த பக்குவத்தில் மட்டன் கிரேவியை செய்தால், பின் எப்போதும் இப்படி தான் மட்டன் கிரேவியை செய்வீர்கள். அந்த அளவில் இதன் சுவையும், மணமும் ஆளை மயக்கும் வகையில் இருக்கும்.

உங்களுக்கு பூரிக்கு ஏற்ற மட்டன் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பூரிக்கு ஏற்ற மட்டன் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு...
* மட்டன் - 1 கிலோ
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 3 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 1 டேபிள் ஸ்பூன்
கிரேவிக்கு...
* நல்லெண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 3 துண்டு
* கிராம்பு - 5
* அன்னாசிப்பூ - பாதி
* ஏலக்காய் - 1
* பிரியாணி இலை - 1
* கல்பாசி - சிறிது
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* சுடுநீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
* எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
* நெய் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் மட்டனை நீரில் நன்கு கழுவி கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் கழுவிய மட்டனை எடுத்து, அதில் மஞ்சள்
தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், சீரகத் தூள், சோம்புத் தூள்,
சுவைக்கேற்ப உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர் சேர்த்து நன்கு
பிரட்டி, ஃப்ரிட்ஜ்ஜில் 20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, ஏலக்காய், பிரியாணி இலை,
கல்பாசி, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் ஊற வைத்த மட்டனை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.
* பின்பு அதில் மட்டன் மூழ்கும் அளவில் சுடுநீரை ஊற்றி கிளறி, குக்கரை
மூடி மிதமான தீயில் வைத்து 6-8 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பில்
வைத்து, 5 நிமிடம் நீர் வற்றும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
* பின் அதில் கரம் மசாலா மற்றும் மிளகுத் தூளை சேர்த்து கிளறி, 2
நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை
சாற்றினை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* இறுதியாக நெய் சேர்த்து கிளறி பரிமாறினால், சுவையான மட்டன் கிரேவி
தயார்.



Click it and Unblock the Notifications