Latest Updates
-
மீல் மேக்கர் சால்னா ரெசிபி - இந்த மாதிரி சால்னா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரி அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு ஏற்ற ஆப்கானி சோயா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க மற்றவர்களின் உணர்வுகளாடு மோசமாக விளையாடுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி என்ன? -
பார்லர் போகாமலேயே முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்!
மட்டன் சிக்கன் மசாலா பவுடர்
கடைகளில் விற்கப்படும் பொடிகளை விட, வீட்டில் தயாரிக்கும் பொடிகள் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் அடிக்கடி மட்டன், சிக்கன் சமைத்து சாப்பிடுபவரானால், அவற்றிற்கு தேவையான மசாலா பொடியை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்துங்கள்.
பலருக்கும் சமையலுக்கு வேண்டிய பொடிகளை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தும் பழக்கம் இருக்கும். சொல்லப்போனால் கடைகளில் விற்கப்படும் பொடிகளை விட, வீட்டில் தயாரிக்கும் பொடிகள் மிகவும் சுவையாக இருக்கும். நீங்கள் அடிக்கடி மட்டன், சிக்கன் சமைத்து சாப்பிடுபவரானால், அவற்றிற்கு தேவையான மசாலா பொடியை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தினால், அசைவ ரெசிபிக்கள் மிகவும் ருசியாகவும், மணமாகவும் இருக்கும்.

உங்களுக்கு மட்டன் சிக்கன் மசாலா பவுடர் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மட்டன் சிக்கன் மசாலா பவுடர் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுக்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியல் 1:
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* மல்லி - 1/2 கப்
* வரமிளகாய் - 4
* காஷ்மீரி மிளகாய் - 4
* பூண்டு - 4 பல்
வறுக்க வேண்டிய பொருட்களுக்கான பட்டியல் 2:
* மிளகு - 1 டேபிள் ஸ்பூன்
* சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
* சோம்பு - 3 டேபிள் ஸ்பூன்
* கசகசா - 1 டேபிள் ஸ்பூன்
* கிராம்பு - 10
* 1/2 இன்ச் பட்டை - 4 துண்டு
* ஏலக்காய் - 5
* அன்னாசிப்பூ - 1
* பிரியாணி இலை - 1
* ஜாதிபத்திரி - 2
* கசூரி மெத்தி - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், முதல் பட்டியலில் உள்ள பொருட்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒரு தட்டில் கொட்டி குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் இரண்டாவது பட்டியலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின்பு அனைத்து பொருட்களையும் மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து குளிர வைத்து, ஒரு காற்றுப்புகாத ஜாரில் போட்டு, தேவையான போது பயன்படுத்தவும்.
குறிப்பு:
* அரைத்த மசாலா பொடியை நன்கு குளிர வைத்த பின் டப்பாவில் போடுங்கள். இல்லாவிட்டால் பொடி சீக்கிரம் பாழாகிவிடும்.
* தயாரித்த பொடியானது 2 மாதம் வரை நன்றாக இருக்கும்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

