Latest Updates
-
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா?
வெங்காயம், தக்காளி போடாம முட்டைக்கோஸ் குழம்பு செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
Muttaikose Kulambu Recipe In Tamil: மதிய வேளையில் எப்போதும் ஒரே மாதிரியான குழம்பு செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான குழம்பு செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ் உள்ளதா? அப்படியானால் அந்த முட்டைக்கோஸ் கொண்டு ஒரு குழம்பு செய்யுங்கள்.
முக்கியமாக இந்த முட்டைக்கோஸ் குழம்பிற்கு வெங்காயம், தக்காளி போன்றவை தேவையில்லை. பொதுவாக குழம்பிற்கு இந்த இரண்டும் முக்கியம். ஆனால் இந்த முட்டைக்கோஸ் குழம்பிற்கு தேவையில்லை. இந்த குழம்பு சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு முட்டைக்கோஸ் குழம்பு ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டைக்கோஸ் குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெருங்காயத் தூள் - 1 டீஸ்பூன்
* காஷ்மீரி மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - 2 கப்
வேக வைப்பதற்கு..
* முட்டைக்கோஸ் - 1/4 கிலோகிராம்
* புளி - 1 எலுமிச்சை அளவு
* சிறிய பூண்டு - 10 பல்
* உப்பு - சுவைக்கேற்ப
* கத்திரிக்காய் - 4
* தண்ணீர் - 1/2 கப்
செய்முறை:
* முதலில் முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் குக்கரில் முட்டைக்கோஸ், புளி, பூண்டு, கத்திரிக்காய்,
சிறிது உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, குக்கரை
மூடி 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, வேக வைத்ததை மிக்சர் ஜாரில்
போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள், காஷ்மீரி மிளகாய்
தூள், குழம்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ளதை
சேர்த்து கிளறி, 2 கப் நீரை ஊற்றி ஒரு கொதி விட்டு இறக்கினால்,
சுவையான முட்டைக்கோஸ் குழம்பு தயார்.
Image Courtesy: Traditionally Modern Food



Click it and Unblock the Notifications
