Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
முட்டையை வெச்சு இப்படி புளிக்குழம்பு செய்யுங்க.. சாதத்துடன் சாப்பிட்டா சும்மா அள்ளும்...
Muttai Puli Kuzhambu Recipe In Tamil: இன்று மதியம் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? தினமும் சாம்பார் செய்து போராடித்துவிட்டதா? அப்படியானால் இன்று புளிக்குழம்பு செய்யுங்கள். அதுவும் உங்கள் வீட்டில் முட்டை உள்ளதா? அந்த முட்டையைக் கொண்டு அட்டகாசமான சுவையில் முட்டை புளிக்குழம்பை செய்யுங்கள்.
இந்த முட்டை புளிக்குழம்பு சாதத்துடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும். வேக வைத்த முட்டையை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு முட்டை புளிக்குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முட்டை புளிக்குழம்பின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கடலை எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* வரமிளாய் - 2
* கறிவேப்பிலை - 2
* வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2
* பூண்டு - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - 1 டீஸ்பூன்
* புளி - 1 சிறிய நெல்லிக்காய் அளவு
* சுடுநீர் - 1 கப்
* துருவிய தேங்காய் - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* வேக வைத்த முட்டை - 4
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் புளியை சுடுநீரில் 15 நிமிடம் ஊற வைத்து, பிசைந்து சாறு
எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் துருவிய தேங்காயை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* பின் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள்
நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், பெருங்காயத்
தூள் சேர்த்து சில நொடிகள் நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு தூவி குறைவான
தீயில் வைத்து, தக்காளியை நன்கு மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பின் அதில் புளிச்சாற்றினை சேர்த்து கிளறி, மூடி வைத்து குறைவான
தீயில் வைத்து 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
* பின்னர் அரைத்து வைத்துள்ள தேங்காயை சேர்த்து கிளறி, வேக வைத்த
முட்டைகளை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து,
மிதமான தீயில் வைத்து 5 நிமிடம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.
* இறுதியில் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான முட்டை
புளிக்குழம்பு தயார்.
Image Courtesy: kannammacooks



Click it and Unblock the Notifications
