Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்.. -
மணத்தக்காளி கீரை கடையல் ரெசிபி - கீரையை இப்படி செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இதுல உங்களுக்கு பிடிச்ச பழம் என்னன்னு சொல்லுங்க.. உங்களோட பலம் என்னன்னு சொல்றோம்.. -
ஒரு மணி நேரம் ஏன் 60 நிமிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? 100 நிமிடமாக என் பிரிக்கப்படவில்லை தெரியுமா? -
யாரும் பேசாத குடும்ப நல்வாழ்வு போக்கு: நிதித் தயார்நிலை -
September Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
செப்டம்பர் மாதத்தில் பல கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 துரதிர்ஷ்டமான ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கோவை ஸ்பெஷல் உப்பு பருப்பு - சிம்பிளா 10 நிமிஷத்துல எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
மணமணக்கும்.. காரசாரமான... காளான் கிரேவி
Mushroom Gravy Recipe: உங்கள் வீட்டில் காளானை அடிக்கடி வாங்கி சமைப்பீர்களா? இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? அப்படியானால் அந்த சப்பாத்திக்கு காளானை வாங்கி கிரேவி செய்யுங்கள்.
நீங்கள் செய்யும் காளான் கிரேவி சுவையாக இருக்காதா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு ட்ரை செய்யுங்கள். இந்த காளான் கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் அட்டகாசமான சுவையுடன் இருக்கும்.

உங்களுக்கு காளான் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே காளான் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* காளான் - 250 கிராம் (துண்டுகளாக்கிக் கொள்ளவும்)
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1
* ஏலக்காய் - 3
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் - 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* கறிவேப்பிலை - சிறிது
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* தண்ணீர் - தேவையான அளவு
* உப்பு - சுவைக்கேற்ப
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பட்டை, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்னர் அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள், சீரகத் தூள், கரம்
மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் மற்றும்
கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* பின் அதில் காளானை சேர்த்து கிளறி, 3-4 நிமிடம் வேக வைத்து,
கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி, காளானை நன்கு வேக வைக்க
வேண்டும்.
* காளான் நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியைத் தூவி இறக்கி, மேலே
ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான மற்றும் காரசாரமான காளான்
கிரேவி தயார்.
Image Courtesy: steffisrecipes



Click it and Unblock the Notifications