Latest Updates
-
வார ராசிபலன்கள் - உங்க ராசி என்னனு சொல்லுங்க? இந்த வாரம் எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம் -
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
ஒரு கப் முருங்கைக்கீரை இருந்தா போதும்.. சுவையான துவையலை செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Murungai Keerai Thogayal Recipe: இன்று இரவு உங்கள் வீட்டில் இட்லி, தோசை செய்ய போகிறீர்களா? அதற்கு ஒரு சத்தான மற்றும் சுவையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் இதுவரை வீட்டில் முயற்சிக்காத ஒரு சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா?
உங்கள் வீட்டில் முருங்கைக்கீரை உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு துவையல்/சட்னி செய்யுங்கள். இந்த முருங்கைக்கீரை துவையல் இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, சாதத்துடன் சாப்பிடவும் நன்றாக இருக்கும்.

முக்கியமாக இந்த முருங்கைக்கீரை துவையல் அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும், எளிதில் செய்யக்கூடிய வகையில் இருக்கும். உங்களுக்கு முருங்கைக்கீரை துவையலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே முருங்கைக்கீரை துவையல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* முருங்கைக்கீரை - 1 கப்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் - 3
* துருவிய தேங்காய் - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* புளி - 1 சிறிய துண்டு
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் சுத்தம் செய்த முருங்கைக்கீரையை நீரில் கழுவி, அதை ஒரு
துணியில் போட்டு உலர்த்த வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு முருங்கைக் கீரையை சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து, அதில் துருவிய தேங்காயை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு
சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் புளியை சேர்த்து கிளறி, இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பின்பு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் சேர்த்து,
சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்தால், சுவையான மற்றும் சத்தான
முருங்கைக்கீரை துவையல் தயார்.
Image Courtesy: pallavibhat



Click it and Unblock the Notifications
