Latest Updates
-
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்.. -
முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெள்ளையாகணுமா? அப்ப பீட்ரூட் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க எவ்வளவு வயதானாலும் குழந்தைத்தனம் மாறாதவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் ரவையும், 2 கப் பாலும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட்டை செய்யுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
இந்தியாவின் அனைத்து தண்டவாளங்களிலும் ஏன் கற்கள் கொட்டப்பட்டுளளன தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
தேர்வு காலத்தில் நினைவாற்றலை அதிகரிக்க எந்த மாதிரியான உணவுகளை சாப்பிடணும் தெரியுமா? -
தாபா ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. மதியம் சாதத்துக்கு இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்..
Murungai Keerai Chammanthi Recipe In Tamil: வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை அனைவரும் அறிவோம். கீரைகளில் முருங்கைக்கீரை எளிதில் கிடைக்கக்கூடியது. என்ன தான் முருங்கைக்கீரை சத்தானதாக இருந்தாலும், பெரும்பாலும் இதை பொரியலாகவோ, கடைந்தோ அல்லது சாம்பாராகவோ தான் செய்து சாப்பிடுவோம்.
ஆனால் அனைவருக்குமே முருங்கைக்கீரையை பிடித்துவிடாது. சிலர் முருங்கைக்கீரையை செய்தாலே ஓடிவிடுவார்கள். இருப்பினும் முருங்கைக்கீரையைக் கொண்டு சம்மந்தி செய்து, சூடான சாதத்துடன் சாப்பிடும் போது சுவை பிரமாதமாக இருப்பதோடு, சத்தானதும் கூட.

உங்களுக்கு முருங்கைக்கீரை சம்மந்தியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முருங்கைக்கீரை சம்மந்தி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* பூண்டு - 2
* வரமிளகாய் - 3
* சின்ன வெங்காயம் - 10
* துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* முருங்கைக்கீரை - 2 கைப்பிடி
* புளி - சிறிய துண்டு
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, வரமிளகாய்
ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் துருவிய தேங்காய், கறிவேப்பிலை, பெருங்காயத் தூள்
மற்றும் புளியை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் 2 கைப்பிடி முருங்கைக்கீரையை சேர்த்து, சுவைக்கேற்ப
உப்பு சேர்த்து நன்கு கீரை வேகும் வரை வதக்கி இறக்கி குளிர வைக்க
வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை
ஊற்றி சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்து உருட்டினால், சுவையான
முருங்கைக்கீரை சம்மந்தி தயார்.



Click it and Unblock the Notifications
