Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
1 கப் மீந்து போன சாதம் இருந்தா.. 10 நிமிடத்தில் மொறுமொறுப்பான முறுக்கு செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க.
Leftover Rice Murukku Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் வீட்டில் இருப்போர் ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் மதியம் சமைத்த சாதம் உள்ளதா? அப்படியானால் அந்த சாதத்தைக் கொண்டு மாலை வேளையில் அட்டகாசமான சுவையில் முறுக்கு சுடுங்கள். இந்த முறுக்கு செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும்.
உங்களுக்கு மீந்து போன சாதம் கொண்டு எப்படி முறுக்கு சுடுவது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீந்து போன சாதத்தைக் கொண்டு செய்யக்கூடிய முறுக்கு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* சாதம் - 1 கப்
* பொட்டுக்கடலை - 1/2 கப்
* மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* கருப்பு எள்ளு - 1/2 டீஸ்பூன்
* ஓமம் - 1/4 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் பொட்டுக்கடலையை சேர்த்து நன்கு மென்மையாக
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் அரைத்த பொட்டுக்கடலை பொடியை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு அதே மிக்சர் ஜாரில் சாதத்தை சேர்த்து, நீர் சேர்க்காமல்
மென்மையாக அரைத்து, அதை பொட்டுக்கடலை மாவுடன் சேர்க்க வேண்டும்.
* பின்னர் அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு, கருப்பு எள்ளு
ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
* பிறகு ஒமத்தை கைகளால் நசுக்கி, அதையும் சேர்த்து, 1 டீஸ்பூன்
எண்ணெய் ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
* அடுத்து முறுக்கு அச்சை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, பிசைந்து
வைத்துள்ள மாவை எடுத்து, முறுக்கு அச்சினுள் வைத்து, ஒரு துணியை
விரித்து, அதன் மேல் வேண்டிய அளவில் முறுக்குகளை பிழிய வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான
அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிழிந்து வைத்துள்ள முறுக்குகளை
சேர்த்து பொரித்து எடுத்தால், மொறுமொறுப்பான முறுக்கு தயார்.
Image Courtesy: Akshaya. com



Click it and Unblock the Notifications
