Latest Updates
-
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம் -
விஜய் சிஎம் ஆனதும் த்ரிஷா போட்ட அந்த ஒரு போஸ்ட்: இணையத்தில் வெடிக்கும் புதிய சர்ச்சை! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப மைசூர் பருப்பு வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
வீட்டிலேயே மும்பை ஸ்டைல் பானி பூரி செய்வது எப்படி தெரியுமா?
உங்கள் வீட்டில் கடைகளில் விற்கப்படும் சிறிய அளவிலான பூரி உள்ளதா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பானி பூரியை செய்து கொடுங்கள்.
மாலை வேளையில் உங்கள் வீட்டில் உள்ளோர் ஏதாவது சாட் செய்து கொடுக்க கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பானி பூரி சாப்பிட பிடிக்குமா? உங்கள் வீட்டில் கடைகளில் விற்கப்படும் சிறிய அளவிலான பூரி உள்ளதா? அப்படியானால் வீட்டிலேயே ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான பானி பூரியை செய்து கொடுங்கள். வீட்டிலேயே பானி பூரி செய்யும் போது எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் அல்லவா? அதுவும் மழை நேரத்தில் பானி பூரி சாப்பிட்டால் இன்னமும் அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு வீட்டிலேயே மும்பை ஸ்டைல் பானி பூரி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மும்பை ஸ்டைல் பானி பூரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* சின்ன பூரி/பானி பூரி - 24
* எலுமிச்சை - 1
உருளைக்கிழங்கு மசாலாவிற்கு...
* உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்தது)
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* ப்ளாக் சால்ட் - சுவைக்கேற்ப
பானிக்கு...
* புதினா - 1/2 கப்
* கொத்தமல்லி - 1 கப்
* இஞ்சி - 1 இன்ச்
* பச்சை மிளகாய் - 2-3
* புளி - 1 எலுமிச்சை அளவு
* வெல்லம் - 4 டேபிள் ஸ்பூன்
* சீரகத் தூள் - 1 டீஸ்பூன்
* சாட் மசாலா - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1/4 கப் (அரைப்பதற்கு)
* தண்ணீர் - 1 கப்
* ப்ளாக் சால்ட் - சுவைக்கேற்ப
* ஐஸ் கட்டிகள் - சிறிது
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, கையால் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சீரகத் தூள், சாட் மசாலா, ப்ளாக் சால் சேர்த்து நன்கு கையால் பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது உருளைக்கிழங்கு மசாலா தயார்.
* பின் மிக்சர் ஜாரில் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய், புளி ஆகியவற்றை சேர்த்து, 1/4 கப் நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் 1 கப் நீரை ஊற்றி, வேண்டுமானால் இன்னமும் நீரை ஊற்றி, வெல்லம், சீரகத் தூள், சாட் மசாலா, ப்ளாக் சால்ட் ஆகியவற்றை சேர்த்து, சிறிது ஐஸ் கட்டிகளை சேர்த்து கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பானி தயார்.
* பின்னர் ஒரு பானி பூரியை எடுத்து அதன் நடுவே துளையிட்டு, அதனுள் முதலில் உருளைக்கிழங்கு மசாலாவை வைக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து பானி பூரியிலும் உருளைக்கிழங்கு மசாலாவை வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் மேலே எலுமிச்சை சாற்றினை பிழிய வேண்டும்.
* பின் தயாரித்து வைத்துள்ள பானியை அதில் ஊற்றினால், மும்பை ஸ்டைல் பானி பூரி தயார்.



Click it and Unblock the Notifications









