Latest Updates
-
சிக்கன் எடுத்தா இப்படி மசாலா அரைச்சு கிரேவி செஞ்சு பாருங்க.. பூரி, சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 23 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நல்ல செய்திகள் தேடிவரப்போகுதாம் -
வார ராசிபலன் (23 August 2026 - 29 August 2026)- உங்க ராசிப்படி இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா -
மலபார் சிக்கன் கறி ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - சப்பாத்தி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இளம் வயதிலேயே சொந்த வீடு வாங்கும் யோகம் இருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சவூதி அரேபியாவில் இந்திய ஓட்டுநர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஐயங்கார் ஸ்டைல் அஞ்சறைப் பெட்டி குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஆகஸ்ட் 28-ல் நடக்கும் சந்திர கிரகணத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துன்பங்கள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
முட்டைக்கோஸும், உருளைக்கிழங்கும் வெச்சு இப்படி கிரேவி செய்யுங்க.. பூரி, சப்பாத்திக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கஷ்டங்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
முள்ளங்கியை வெச்சு ஒரு டைம் இப்படி சட்னி செய்யுங்க... முள்ளங்கி பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க..
Mullangi Chutney Recipe In Tamil: காலையில் இட்லி, தோசைக்கு ஒரு அசத்தலான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? அதுவும் ஒரு சத்தான சைடு டிஷ் செய்ய விரும்புகிறீர்களா? உங்கள் வீட்டில் முள்ளங்கி உள்ளதா? அந்த முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் செய்தால், அதன் வாசனையாலேயே வீட்டில் உள்ளோர் இந்த காயை சாப்பிட மறுக்கிறார்களா?
அப்படியானால் அவர்களுக்கு முள்ளங்கியைக் கொண்டு சாம்பார் செய்யாமல், சட்னி செய்து கொடுங்கள். இந்த முள்ளங்கி சட்னியில் முள்ளங்கியின் வாசனையே வராது. மேலும் இது மிகவும் ருசியாகவும், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும். செய்வதற்கு சுலபமாகவும் இருக்கும்.

உங்களுககு முள்ளங்கி சட்னியை எப்படி செய்வதன்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே முள்ளங்கி சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 4
* பெரிய வெங்காயம் - 1
* பூண்டு - 7 பல்
* பெரிய முள்ளங்கி - 1
* பெரிய தக்காளி - 1
* புளி - நெல்லிக்காய் அளவு
* கறிவேப்பிலை - 2 கொத்து
* கொத்தமல்லி - ஒரு கைப்பிடி
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 1
செய்முறை:
* முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை நன்கு பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின் முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு, அதையும் பொடியாக நறுக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடலை பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் வரமிளகாய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, வெங்காயம் மற்றும
பூண்டு சேர்த்து கண்ணாடி பதத்திற்கு நன்கு வதக்கிக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதில் முள்ளங்கியை சேர்த்து, அதன் நிறம் மாறும் வரை வதக்க
வேண்டும்.
* பின்னர் தக்காளி, புளியை சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க
வேண்டும்.
* அடுத்து கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை சேர்த்து ஒரு நிமிடம்
கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, ஓரளவு கொரகொரவென்று
அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில்
மாற்றிக் கொண்டு, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறிக் கொள்ள
வேண்டும்.
* இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து
தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான முள்ளங்கி சட்னி
தயார்.
Image Courtesy: Gomathi Recipes



Click it and Unblock the Notifications