Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
முகாலய சிக்கன் ரெசிபி... இந்த சூப்பரான சிக்கன் உங்கள் சண்டேவை ஸ்பெஷலானதாக மாற்றுமாம்...!
Mughlai Chicken Recipe in Tamil: சண்டே என்றாலே பெரும்பாலான வீடுகளில் அசைவ உணவுகள்தான் பிரதானமாக இருக்கும், சொல்லப்போனால் சண்டே வருவதே அசைவ உணவு சாப்பிடத்தான் என்று நினைப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த உலகிலேயே அதிக வழிகளில் சமைக்கக்கூடிய ஒரு சுவையான உணவென்றால் அது சிக்கன்தான்.
இந்தியாவின் உணவு கலாச்சாரத்தில் முகலாயர்களின் தாக்கம் இன்றுவரை தொடர்கிறது. இன்றுவரை நாம் விரும்பி சாப்பிடும் உணவான பிரியாணி முகலாயர்களால் அறிமுகப்படுத்தபட்டதுதான். அதேபோல அவர்கள் அறிமுகப்படுத்திய மற்றொரு சுவையான உணவுதான் முகலாய சிக்கன். அனைத்து உணவுகளுக்கும் சிறந்த சைடிஷாக இருக்கும் இந்த முகலாய சிக்கன் உங்கள் சண்டேவை கூடுதல் சிறப்பாக்கும். இந்த பதிவில் முகலாய சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:
- வெங்காயம் - 1 நறுக்கியது
- சிக்கன் - ½ கிலோ
- தயிர் - ½ கப்
- முந்திரி-10 பேஸ்ட் செய்ய
- இஞ்சி - 1 அங்குல துண்டு
- பூண்டு - 6 பல்
- பச்சை மிளகாய்-3
- பிரியாணி இலை-1
- சீரகம் - 1 டீஸ்பூன்
- ஏலக்காய்- 4
- மல்லி தூள் - 1 டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
- வெண்ணெய் - 2 டீஸ்பூன்
- ருசிக்க உப்பு
- எலுமிச்சை சாறு - 2
- பாதாம் - 5
- கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
- இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை ஒரு அரைத்து பேஸ்ட்
தயாரித்து வைத்துக் கொள்ளவும்.
- வெண்ணெயில் பிரியாணி இலை, சீரகம், ஏலக்காய் ஆகியவற்றை
வெடிக்கவும்.
- இதில் இஞ்சி பூண்டு மற்றும் மிளகாய் விழுது சேர்த்து 30 நொடிகள்
வதக்கவும்.
- அதன்பின் வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும். அதன்பின்
கொத்தமல்லி தூள் மற்றும் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு
கலக்கவும்.
- அதில் சிக்கன் சேர்த்து 3-4 நிமிடங்கள் அதிக தீயில் வதக்கவும்.
- அதில் தயிர், முந்திரி விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.. சிறிது
தண்ணீர் ஊற்றி சிக்கன் நன்கு வேகும் வரை சமைக்கவும்.
- சிக்கன் நன்கு வெந்ததும் அதில் பாதாம், கொத்தமல்லி இலை மற்றும்
எலுமிச்சை சாறு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து பின்னர் அடுப்பை
அணைக்கவும்.



Click it and Unblock the Notifications
