Latest Updates
-
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது? -
இந்தியாவின் ஒரு ரயில் நிலையத்தில் கூட ஏன் மருந்து கடை இருப்பதில்லை தெரியுமா? இதுக்கு இப்படி ஒரு காரணம் இருக்கா -
சாணக்கிய நீதி படி இந்த 5 விஷயங்களுக்காக பணத்தை செலவழிப்பவர்களை விட்டு வறுமை எப்பவுமே போகாதாம் -
1 கப் பட்டாணி இருந்தா இந்த மாதிரி பட்டர் மசாலா செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமாக இருக்கும் -
சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைக்கணுமா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்!
மில்க் பேடா ரெசிபி எப்படி செய்வது எனத் தெரியுமா ?- நவராத்திரி ஸ்பெஷல்!!
மில்க் பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க ப
மில்க் பேடா என்பது இந்தியாவில் புகழ்பெற்ற ஸ்வீட்ஸ் வகை ஆகும். பண்டிகை மற்றும் சுப நிகழ்ச்சிகளின் போது இந்த ஸ்வீட்டை விரும்பி செய்வர். பால் இதன் முக்கிய பொருளாகும். இந்த தூத் பேடா எல்லோராலும் விரும்பி சாப்பிடப்படும். இந்தியாவின் எல்லா மூலை முடுக்கு கடைகளிலும் இது கிடைக்கக்கூடியது.
இந்த மில்க் பேடா செய்வதற்கு பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலும் பயன்படுத்தப்படுகிறது. இதனுடன் சேர்க்கப்படும் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடி இதன் சுவையையும் நறுமணத்தையும் மேலும் கூட்டுகிறது.
இந்த மில்க் பேடா வை எளிதாக கூடிய விரைவில் செய்துள்ளது முடித்திடலாம். இதன் இனிப்பு சுவை நாவை சொட்டை போட வைக்கும். யாரும் வேண்டாம் என்று சொல்லாத அளவிற்கு எல்லாருக்குமே பிடித்தமான ஒரு ஸ்வீட்ஸ் ரெசிபி. சரி வாங்க இப்பொழுது இதை எப்படி செய்வது என்பதை வீடியோ மூலமும் மற்றும் செய்முறை விளக்க படத்துடனும் காணலாம்.
மில்க் பேடா வீடியோ ரெசிபி

Recipe By: மீனா பந்தரி
Recipe Type: சுவீட்ஸ்
Serves: 12 பேடாக்கள்
-
கெட்டியான பால் - 200 கிராம்
பால் பவுடர் - 3/4 கப்
நெய் - 1/2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
ஜாதிக்காய் பொடி - கொஞ்சம்
குங்குமப் பூ - 3-4
-
1. அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும்.
2. அதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலை சேர்க்கவும்.
3. நன்றாக கிளறிக் கொண்டே 2-3 நிமிடங்கள் செய்யவும். அடிப்பகுதி பிடிக்காத மாதிரி பார்த்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்க்கவும்.
5. நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாத வரை சமைக்கவும்.
6. 5-10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
7. இப்பொழுது குங்குமப் பூவை சேர்க்கவும்.
8. இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளை கொண்டு சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டவும்.
9. உள்ளங்கைகளால் அந்த பந்துக்களை பேடா வடிவிற்கு தட்டவும்.
10. உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்கவும்.
- 1. பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலுக்கு பதிலாக பால் மற்றும் சுகர் பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்.
- 2. அதே மாதிரி கொயா பயன்படுத்தியும் செய்யலாம்
- 3. அதிகமாக சமைத்து விட்டால் பால் கலவையானது கடினமாக மாறிவிடும்.
- பரிமாறும் அளவு - 1 பேடா
- கலோரிகள் - 103
- கொழுப்பு - 5 கிராம்
- புரோட்டீன் - 4 கிராம்
- கார்போஹைட்ரேட் - 12 கிராம்
- சுகர் - 8 கிராம்
படிப்படியான செய்முறை விளக்கம் :மில்க் பேடா செய்வது எப்படி
1. அடுப்பில் கடாயை வைத்து மிதமான சூட்டில் நெய் சேர்க்கவும்.
2. அதனுடன் பால் பவுடர் மற்றும் கெட்டியான பாலை சேர்க்கவும்.
3. நன்றாக கிளறிக் கொண்டே 2-3 நிமிடங்கள் செய்யவும். அடிப்பகுதி பிடிக்காத மாதிரி பார்த்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது அதனுடன் ஏலக்காய் மற்றும் ஜாதிக்காய் பொடியை சேர்க்கவும்.
5. நன்றாக கிளறி விட்டு பாத்திரத்தின் பக்கவாட்டில் ஒட்டாத வரை சமைக்கவும்.
6. 5-10 நிமிடங்கள் ஆற வைக்க வேண்டும்.
7. இப்பொழுது குங்குமப் பூவை சேர்க்கவும்.
8. இப்பொழுது உங்கள் உள்ளங்கைகளை கொண்டு சின்ன சின்ன பந்து வடிவத்தில் உருட்டவும்.
9. உள்ளங்கைகளால் அந்த பந்துக்களை பேடா வடிவிற்கு தட்டவும்.
10. உங்கள் பெருவிரல் அச்சை பேடாவில் பதிக்கவும்.



Click it and Unblock the Notifications














