Latest Updates
-
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை
பூரி, சப்பாத்திக்கு காளான், மீல் மேக்கர் வெச்சு.. இப்படி கிரேவி செய்யுங்க.. நான்-வெஜ் கிரேவியே தோத்துடும்...
Mealmaker Mushoom Gravy Recipe In Tamil: புரட்டாசி மாதத்தில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டீர்களா? நீங்கள் அசைவ உணவை மிஸ் செய்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு அசைவ உணவின் சுவையையே மிஞ்சும் ஒரு அற்புதமான வெஜ் சைடு டிஷ் செய்யுங்கள்.
எப்படி என்று கேட்கிறீர்களா? காளான் மற்றும் மீல் மேக்கர் இருந்தால் போதும், மட்டன் கிரேவியையே மிஞ்சும் சுவையான சைவ கிரேவியை செய்யலாம். இந்த மீல்மேக்கர் காளான் கிரேவி செய்வதற்கு சுலபமாக இருப்பதோடு, மிகவும் ருசியாகவும் இருக்கும்.

உங்களுக்கு மீல்மேக்கர் காளான் கிரேவியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மீல்மேக்கர் காளான் கிரேவி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
அரைப்பதற்கு...
* வெங்காயம் - 1
* பச்சை மிளகாய் - 1
* முந்திரி - 4
* கொத்தமல்லி - சிறிது
கிரேவிக்கு...
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* காளான் - 250 கிராம்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* மீல் மேக்கர் - 100 கிராம் (சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்து
அதிகப்படியான நீரை பிழிந்துவிட்டு எடுத்துக் கொள்ளவும்)
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் வெங்காயம், பச்சை மிளகாய், முந்திரி
மற்றும் சிறிது கொத்தமல்லியை சேர்த்து நன்கு அரைத்து தனியாக வைத்துக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின்பு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க
வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும்
வரை வதக்க வேண்டும்.
* அதன் பின் அதில் அரைத்து வைத்துள்ள வெங்காய விழுதை சேர்த்து 2
நிமிடம் வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா
ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் காளானை சேர்த்து 2 நிமிடம் நன்கு கிளறி விட
வேண்டும்.
* பின்பு அதில் சிறிது நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து
கிளறி, மீல் மேக்கரை சேர்த்து கிளறி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை
ஊற்றி மூடி வைத்து, குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து
இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சுவையான மீல்மேக்கர் காளான் கிரேவி
தயார்.
Image Courtesy: SIMPLY SAMAYAL



Click it and Unblock the Notifications
