Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
சத்தான... மசாலா பால்
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், சூடாகவும், சத்தாகவும் குடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், மசாலா பால் குடியுங்கள்.
மாலை வேளையில் எப்போதும் காபி, டீ குடித்து போர் அடித்துவிட்டதா? தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், சூடாகவும், சத்தாகவும் குடிக்க பலருக்கும் ஆசை இருக்கும். நீங்கள் அப்படியொரு பானத்தைக் குடிக்க விரும்பினால், மசாலா பால் குடியுங்கள். இந்த மசாலா பால் நட்ஸ்கள் மற்றும் மசாலா பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இந்த பானம் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருமே விரும்பி குடிக்குமாறு இருக்கும்.

உங்களுக்கு மசாலா பால் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா பால் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பால் - 2 கப்
* சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை - 1/2 இன்ச்
* கிராம்பு - 2
* ஏலக்காய் - 1
* முந்திரி - 6
* பாதாம் - 6
* பிஸ்தா - 8
* குங்குமப்பூ - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முந்திரி, பாதாம், பிஸ்தா, பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து 2-3 நிமிடம் வறுத்து இறக்கி, சிறிது குங்குமப்பூவை சேர்த்து ஒருமுறை கிளறி விட வேண்டும்.
* வறுத்த பொருட்களானது நன்கு குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடாகி கொதிக்க ஆரம்பித்ததும், நெருப்பைக் குறைக்க வேண்டும்.
* பின் பாலில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து, 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
* பிறகு அதில் அரைத்த பொடியை சேர்த்து கிளறி, 2-3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி, ஒரு டம்ளரில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த பாலின் மேல் சிறிது குங்குமப்பூ மற்றும் பொடித்த நட்ஸ் சிறிது தூவினால், சுவையான மற்றும் சத்தான மசாலா பால் தயார்.
Image Courtesy: sharmispassions



Click it and Unblock the Notifications

