Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
ஒருடைம் மக்ரோனியை இந்த மாதிரி செய்யுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இப்படி தான் செய்வீங்க...
Masala Cheese Macaroni Recipe In Tamil: உங்கள் வீட்டில் உள்ளோர் மக்ரோனியை விரும்பி சாப்பிடுவார்களா? இதனால் அடிக்கடி உங்கள் வீட்டில் மக்ரோனியை செய்வீர்களா? ஆனால் எப்போதும் ஒரே மாதிரி தான் மக்ரோனியை செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை மக்ரோனியை செய்வதாக இருந்தால், மசாலா சீஸ் மக்ரோனியை செய்யுங்கள்.
இப்படி ஒருமுறை மக்ரோனியை செய்தால், பின் அடிக்கடி இப்படி தான் செய்வீர்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஒருமுறை இப்படி செய்து கொடுங்கள், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள். அந்த அளவில் இது ருசியாக இருக்கும்.

உங்களுக்கு மசாலா சீஸ் மக்ரோனியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மசாலா சீஸ் மக்ரோனி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மக்ரோனி வேக வைப்பதற்கு...
* மக்ரோனி - 2 கப்
* நீர் - தேவையான அளவு
* உப்பு - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 3/4 டீஸ்பூன்
* தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்
* மொசரெல்லா சீஸ் - சிறிது (துருவியது)
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மக்ரோனியை வேக வைக்க சற்று அதிகமாக
நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* நீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் மக்ரோனியை சேர்த்து, அத்துடன்
உப்பு மற்றும் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 10 நிமிடம் வேக வைக்க
வேண்டும்.
* மக்ரோனி வெந்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, நீரை வடிகட்டிவிட்டு,
குளிர்ந்த நீரில் ஒருமுறை மக்ரோனியை அலசி தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க
வேண்டும்.
* பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் தக்காளியை சேர்த்து நன்கு
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், மல்லித் தூள்
மற்றும் கரம் மசாலா சேர்த்து 2 நிமிடம் பச்சை வாசனை போக வேக வைக்க
வேண்டும்.
* பின் அதில் தக்காளி சாஸை உப்பு கிளறி, வேக வைத்துள்ள மக்ரோனியை
சேர்த்து நன்கு 2 நிமிடம் கிளறி விட்டு, மேலே மொசரெல்லா சீஸை தூவி,
மூடி வைத்து 4 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான மசாலா சீஸ்
மக்ரோனி தயார்.



Click it and Unblock the Notifications




