Latest Updates
-
பீர்க்கங்காய் வாங்குனா இந்த பக்குவத்துல மசாலா செஞ்சு பாருங்க - சப்பாத்தி, சாதத்துக்கு அட்டகாசமா இருக்கும் -
நோபல் பரிசு ஏன் கணிதத்திற்கு வழங்கப்படுவதில்லை? கணிதத்திற்கு கொடுக்கப்படும் உயரிய விருதுகள் என்னென்ன தெரியுமா -
சுரைக்காய் தோசையும், முள்ளங்கி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணிப் பாருங்க.. -
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு!
மரவள்ளிக்கிழங்கு வெச்சு ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸை செய்யுங்க.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க...
Maravalli Kilangu Puttu: தற்போது மரவள்ளிக்கிழங்கு சீசன் என்பதால் மார்கெட்டில் விலைக் குறைவில் இந்த கிழங்கு கிடைக்கும். மரவள்ளிக்கிழங்கு மிகவும் சுவையானது மட்டுமின்றி, சத்தானதும் கூட. ஆனால் உங்கள் வீட்டில் உள்ளோர் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடமாட்டார்களா?
அவர்களை மரவள்ளிக்கிழங்கை சாப்பிட வைக்க வேண்டுமா? அப்படியானால் மாலை வேளையில் இந்த கிழங்கைக் கொண்டு வித்தியாசமான சுவையில் புட்டு செய்யுங்கள். இந்த வித்தியாசமான புட்டு பள்ளி முடிந்து வரும் குழந்தைகளின் பசியைப் போக்குவதோடு, சத்தையும் வழங்கும்.

உங்களுக்கு மரவள்ளிக்கிழங்கு புட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மரவள்ளிக்கிழங்கு புட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
* ரவை - 14 கப்
* தேங்காய் - 1 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
* சர்க்கரை - 1/2 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* நெய்யில் வறுத்த முந்திரி, பாதாம் - சிறிது
செய்முறை:
* முதலில் மரவள்ளிக்கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, அதை துருவிக்
கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பாத்திரத்தில் துருவிய மரவள்ளிக்கிழங்கை எடுத்து, அத்துடன்
ரவை, துருவிய தேங்காய், உப்பு, ஏலக்காய் தூள், சர்க்கரை மற்றும் அரிசி
மாவு ஆகியவற்றை சேர்த்து கரண்டியால் நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும்,
முந்திரி மற்றும் பாதாமை சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, அதையும்
தயாரித்து வைத்துள்ள மாவுடன் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பிறகு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, நீரை
நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
* அதற்குள் இட்லி தட்டில் எண்ணெய் தடவி, தயாரித்து வைத்துள்ள மாவை
ஒவ்வொரு குழிக்கரண்டியில் நிரப்பி, இட்லி தட்டின் குழியினுள் வைத்து,
இட்லி பாத்திரத்தில் இட்லி தட்டை வைத்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக
வைத்து இறக்கி, குளிர்ந்த பின் அதை எடுத்தால், சுவையான
மரவள்ளிக்கிழங்கு புட்டு தயார்.



Click it and Unblock the Notifications
