Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மஞ்சள் கிழங்கை தூக்கியெறியாம இந்த மாதிரி சுவையான சட்னியா அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்...!
Manjal Kilangu Chutney Recipe in Tamil: தமிழர் பண்டிகையான பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டுவிட்டது. அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைப்பதற்கு நிச்சயம் மஞ்சள் கிழங்கு வாங்கியிருப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு அந்த மஞ்சள் கிழங்கை நாம் தூக்கித்தான் எறிவோம். நகரங்களில் மட்டுமல்ல கிராமத்தில் கூட இந்த மஞ்சள் கிழங்கை தூக்கித்தான் எறிவார்கள்.
இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். இந்த மஞ்சள் கிழங்கை வைத்து சூப்பரான அதேசமயம் ஆரோக்கியமான சட்னியை அரைக்கலாம். இந்த சட்னி இட்லி, தோசை மட்டுமின்றி சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் அருமையாக இருக்கும். இந்த சட்னி சுவையாக இருப்பது மட்டுமின்றி வயிற்றுப்புண், செரிமான பிரச்சினைகள் மற்றும் அஜீரணக் கோளாறு போன்ற பல பிரச்சினைகளை குணப்படுத்தும்.

உங்களுக்கு மஞ்சள் கிழங்கை வைத்து வித்தியாசமான சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்சள் கிழங்கு சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- துருசியா மஞ்சள் கிழங்கு - 1/4 கப்
- துருவிய தேங்காய் - 1/4 கப்
- பூண்டு - 5 பல்
- பச்சை மிளகாய் - 3
- இஞ்சி - சிறிய துண்டு
- சீரகம் - 1/2 டீஸ்பூன்
- கடலை பருப்பு - 1 டீஸ்பூன்
- புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
- உப்பு - தேவையான அளவு
- தண்ணீர் - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - 1 டீஸ்பூன்
- கடுகு - 1/2 டீஸ்பூன்
- உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
- பெருங்காயம் - ஒரு சிட்டிகை
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
செய்முறை:
- முதலில் மஞ்சள் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி கேரட் போல துருவி வைத்துக் கொள்ளவும். அதேபோல தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் துருவிய மஞ்சள், துருவிய தேங்காய், பூண்டு பல், பச்சை மிளகாய், சீரகம், கடலைப் பருப்பு, புளி மற்றும் தேவையான அளவு உப்பை சேர்க்கவும்.
- சிறிதளவு தண்ணீர் சேர்த்து மென்மையான சட்னியாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் கடுகு சேர்த்து தாளிக்கவும். கடுகு பொரிந்ததும் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
- உளுந்தம்பருப்பு நிறம் மாறியதும் இதை சட்னி மீது ஊற்றி நன்கு கிளறவும்.
- இந்த சட்னி இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷாக இருக்கும்.



Click it and Unblock the Notifications