Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
தோசைக்கு இந்த அறுசுவை மங்களூர் சட்னியை ட்ரை பண்ணி பாருங்க... இனிமே இதை மட்டும்தான் அரைப்பீங்க...!
Mangalore Chutney Recipe in Tamil: பெரும்பாலான வீடுகளில் ககாலை அல்லது இரவு நேர உணவாக இருப்பது இட்லி, தோசைதான். ஆனால் பெரும்பாலும் அவற்றுக்கு ஒரே மாதிரியான சட்னிதான் செய்யப்படுகிறது. திரும்பவும் அதே சட்னியா என வீட்டில் அலுத்து கொள்கிறார்களா? என்ன சட்னி செய்வது என மண்டையில் கொட்டி கொண்டு யோசிக்கிறீங்களா?
கர்நாடகா-ல தண்ணீர் மட்டும் தான் கேட்கணுமா, சட்னி ரெசிபி கூட கேட்கலாம். அப்படி என்ன சட்னின்னு யோசிக்கிறீங்களா? அறுசுவையையும் நாக்கில நடனமாட வைக்கிற மாதிரி மங்களூர் அறுசுவை சட்னி தான் பாக்க போறோம். எப்படி செய்யறதுன்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:
- வெந்தயம் - ¼ டீ ஸ்பூன்
- பெரிய வெங்காயம் - 1(பெரியது)
- இஞ்சி - ஒரு துண்டு(ஒரு இன்ச் அளவு)
- தக்காளி - 2(சிறியது)
- கறிவேப்பிலை - ஒரு கொத்து
- பொட்டுக்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
- புளி - சிறிதளவு (சிறிய நெல்லிக்காய் அளவு)
- தேங்காய் - ½ மூடி
- நாட்டு சர்க்கரை - 1
- எண்ணெய் - தேவையான அளவு
- மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
- எண்ணெய் - தேவையான அளவு
- கடுகு - ¼ டீ ஸ்பூன்
- கடலை பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- உளுந்தம் பருப்பு - ¼ டீ ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
- வெங்காயத்தை தோல் உரித்து சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
- மண் இல்லாமல் இஞ்சியை அலசி தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.
- தேங்காயை துருவியோ அல்லது நறுக்கியோ உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்து கொள்ளவும்.
- தக்காளியை கழுவி விட்டு பின் ஒன்று இரண்டாக வதக்க நறுக்கி எடுக்கவும்.
- வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் அதில் வெந்தயம் சேர்த்து கருகாமல் வதக்கவும்.
- வெந்தயம் கருகினால் கசப்புச்சுவை அதிகமாகிவிடும்.
- பின் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நிறம் மாறாமல் வதக்கவும்.
- அதனுடன் நறுக்கிய இஞ்சி துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
- நறுக்கிய தக்காளி மற்றும் கருவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
- பின் அதில் பொட்டுக்கடலை, புளி மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து கிளறவும்.
- அதனுடன் மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்கவும். கடைசியாக அதனுடன் தேங்காய் சேர்த்து கிளறி வைக்கவும்.
- சூடு ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து வேறு பாத்திரத்திற்கு மாற்றவும்.
- மீண்டும் வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்க்கவும்.
- எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்த்து பொரிய விடும். பின் அதில் கடலை பருப்பு மற்றும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
- கடைசியாக கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- இந்த தாளிப்பை சட்னி உடன் சேர்த்து கிளறினால் சுவையான மங்களூர் அறுசுவை சட்னி தயார்!



Click it and Unblock the Notifications