Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
15 நிமிடத்தில் மணமணக்கும்.. மணத்தக்காளி வத்தக் குழம்பு செய்வது எப்படி தெரியுமா?
உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வத்தக் குழம்பு பிடிக்குமா? உங்கள் வீட்டில் மணத்தக்காளி வத்தல் உள்ளதா? அப்படியானால் அந்த மணத்தக்காளி வத்தலைக் கொண்டு சுவையான குழம்பு செய்யுங்கள்.
தினமும் சாம்பார், புளிக்குழம்பு செய்து அலுத்துவிட்டதா? உங்கள் வீட்டில் உள்ளோருக்கு வத்தக் குழம்பு பிடிக்குமா? வத்தக் குழம்பு எப்படி வற்றல் பயன்படுத்தி தயாரிக்கும் குழம்பாகும். உங்கள் வீட்டில் மணத்தக்காளி வத்தல் உள்ளதா? அப்படியானால் அந்த மணத்தக்காளி வத்தலைக் கொண்டு சுவையான குழம்பு செய்யுங்கள். இந்த வத்தக்குழம்பை பேச்சுலர்களும் முயற்சி செய்யலாம். அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும்.

உங்களுக்கு மணத்தக்காளி வத்தக் குழம்பு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மணத்தக்காளி வத்தக்குழம்பு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - சிறிது
* உலர்ந்த மணத்தக்காளி வத்தல் - 1/4 கப்
* புளிச்சாறு - 4 டேபிள் ஸ்பூன் / புளி - 1 சிறிய எலுமிச்சை அளவு
* வத்தக் குழம்பு பொடி - 3 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை/வெல்லம் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 3 கப்
செய்முறை:
* முதலில் புளியை 1/2 கப் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் அதை நன்கு பிசைந்து சாறு எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளியை சேர்த்து 2 நிமிடம் மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் உலர்ந்த மணத்தக்காளி வத்தலை சேர்த்து 5 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து, அதில் சர்க்கரை, உப்பு மற்றும் வத்தக் குழம்பு பொடி சேர்த்து நன்கு ஒரு நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் புளிச்சாறு ஊற்றி, தேவையான அளவு நீரையும் ஊற்றி, குழம்பு சற்று சுண்டும் வரை நன்கு 15 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், மணமணக்கும் மணத்தக்காளி வத்தக் குழம்பு தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
