Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு டைப்-2 சர்க்கரை நோய் அபாயம் ஏன் அதிகரிக்கிறது? -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்..
ருசியான... மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த பொரியல்
மதுரை ஸ்டைல் ரத்த பொரியல் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு ரத்த பொரியல் சத்தானதும் கூட. கீழே மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் ஒரு அற்புதமான ரெசிபியை வீட்டில் சமைத்து சாப்பிட விரும்புகிறீர்களா? உங்களுக்கு ரத்தப் பொரியல் பிடிக்குமா? அப்படியானால் அந்த ரத்தப் பொரியலை இந்த வாரம் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். அதுவும் மதுரை ஸ்டைல் ரத்த பொரியல் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு ரத்த பொரியல் சத்தானதும் கூட.

ஏனெனில் ஆட்டு ரத்தத்தில் CLA உள்ளது. இது புற்றுநோயை தடுக்கும் கொழுப்பு அமிலம் மற்றும் இது வீக்கத்தைத் தடுக்கிறது. இது தவிர இதில் பி வைட்டமின் உள்ளது. இது உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் புரோட்டீன்கள் அதிகமாகவும், மாட்டிறைச்சியை விட நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ளது. டயட்டில் இருப்பவர்களுக்கு இது நல்லது.
உங்களுக்கு மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த பொரியல் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மதுரை ஸ்டைல் ஆட்டு ரத்த பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* ஆட்டு இரத்தம் - 1 பெரிய பௌல்
* பூண்டு - 1 பல் (தட்டியது)
* சின்ன வெங்காயம் - 15 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 3
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
* சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* துருவிய தேங்காய் - 1 கப்
* எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஆட்டு இரத்தத்தை கையால் நன்கு பிசைந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அடித்து வைத்துள்ள இரத்தத்தை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* இரத்தம் நன்கு வெந்ததும், சுவைக்கேற்ப உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* இறுதியாக துருவிய தேங்காயைத் தூவி ஒருமுறை கிளறி விட்டு இறக்கினால், சுவையான ஆட்டு ரத்த பொரியல் தயார்.
Image Courtesy: jeevikitchen



Click it and Unblock the Notifications
