Latest Updates
-
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த மணமணக்கும் சாம்பாரை வைச்சு பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும் -
எலுமிச்சை நீர் Vs தேன் கலந்த நீர் - இவற்றில் உடல் எடையைக் குறைக்க சிறந்தது எது? -
தாய் கிழவி இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன் - என்ன செய்திருக்கார் பாருங்க? -
இந்த 4 விஷயங்களை பின்பற்றாதவரின் குடும்பம் விரைவில் வறுமையில் சிக்குமாம் - சாணக்கிய ரகசியம் -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கடன் தீரும் காசு சேரும்.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
வெந்தயக்கீரை தேங்காய் பால் கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஜூலை 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க பணமழையில் நனையப் போறாங்களாம் -
ஜூலை 16-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுகிட்டு பணம் கொட்டும்.. -
தக்காளி தொக்கு இப்படி செய்யுங்க.. 1 வாரம் வரை வெச்சு சாப்பிடலாம்.. சைடு டிஷ் பிரச்சனையே இருக்காது! -
வழுக்கை தலையில் முடி வளரணுமா? அப்ப கடுகு எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்க..
வீடே மணமணக்கும்.. சுவையான... மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி
Madras Style Kozhi Varutha Kari: சமையலை எடுத்துக் கொண்டால், அதில் செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும் மெட்ராஸ் ஸ்டைலில் சிக்கனை சமைத்தால் அட்டகாசமாக இருக்கும்.
இன்று நாம் காணவிருப்பது மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறியைப் பற்றி தான். இந்த கறியானது சாதம், சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி என அனைத்துடனும் சேர்த்து சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.

உங்களுக்கு மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
மசாலாவிற்கு...
* வரமிளகாய் - 6
* மல்லி விதை - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகு - 1 டீஸ்பூன்
* சோம்பு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* வெங்காயம் - 2 கப் (நறுக்கியது)
* தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
* பூண்டு - 5 பல்
* இஞ்சி - 2 இன்ச்
* பட்டை - 1 இன்ச்
* கிராம்பு - 3
* ஏலக்காய் - 1
* அன்னாசிப்பூ - 2
* எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
கிரேவிக்கு...
* நாட்டுக்கோழி - 1/2 கிலோ
* பிரியாணி இலை - 2
* கறிவேப்பிலை - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் நாட்டுக்கோழியை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 டீஸ்பூன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து
கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், வரமிளகாய், மல்லி விதைகள், மிளகு, சோம்பு
மற்றும் சீரகம் சேர்த்து, மிதமான தீயில் வைத்து சில நிமிடங்கள் வறுக்க
வேண்டும்.
* அதன் பின் அதில் வெங்காயம், தக்காளி, பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து
3.4 நிமிடங்கள் நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயமும், தக்காளியும் நன்கு வதங்கியதும், அதில் படடை, கிராம்பு,
ஏலக்காய், அன்னாசிப்பூ சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி இறக்கி குளிர
வைக்க வேண்டும்.
* பின் வதக்கிய பொருட்களை மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி
நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், பிரியாணி இலை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்க
வேண்டும். சிக்கன் ஓரளவு வதங்கி வெள்ளையாகும் போது, அதில் அரைத்த
மசாலாவை சேர்த்து நன்கு ஒருசேர கிளறி விட வேண்டும்.
* அதன் பின் அதில் சுவைக்கேற்ப உப்பு மற்றும் 1/2 கப் நீரை ஊற்றி
கிளறி, மூடி வைத்து குறைவான தீயில் வைத்து 10 நிமிடம் சிக்கனை வேக
வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்து எண்ணெய் மேலே மிதந்து வரும் போது அடுப்பை
அணைத்துவிட்டு, கீழே இறக்கி சிறிது கறிவேப்பிலையைத் தூவினால், சுவையான
மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி தயார்.
Image Courtesy: spiceindiaonline



Click it and Unblock the Notifications